ஞாயிறு, 28 மே, 2023

கொண்டாட்டங்கள்!
தனிமனித வாழ்விலும் அரசியலிலும்! 
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
மானுட வாழ்வில் கொண்டாட்டங்கள் தவிர்க்க 
இயலாதவை. தனிமனித வாழ்வில் கணக்கற்ற 
கொண்டாட்டங்கள் இருக்கின்றன. சமகாலத்தில் 
குழந்தைகளும் இளைஞர்களும் ஏன் 
பெரியவர்களும் கூட தங்களின் பிறந்த
நாட்களைக் கொண்டாடி வருகிறார்கள்.
திருமணமானவர்கள் ஆண்டுதோறும் 
wedding day கொண்டாடி வருகிறார்கள்.

அதைப்போல் அரசியலிலும் சில கொண்டாட்டங்கள் 
இருந்து வருகின்றன. கலைஞர் நடத்திய உலகத்
தமிழ் மாநாடு என்பது கொண்டாட்டமே தவிர 
வேறன்ன? அது என்ன சோஷலிச நடவடிக்கையா?

மக்களவை எம்பிக்கள் 888 பேரும் 
மாநிலங்களவை எம்பிக்கள் 384 பேரும் 
அமரும் அளவு மிகப்பெரிய கட்டிடமாக புதிய 
நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது.
மோடி நடத்தி வைக்கும் இத்திறப்புவிழா ஒரு 
கொண்டாட்டமே! அரசியல் கொண்டாட்டமே! 
பிரும்மாண்டமான ஓர் கொண்டாட்டம்! 
It is just that is all; nothing more or nothing less.

காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் இத்திறப்புவிழாவைப் 
புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் பாஜகவுக்கே 
அனுகூலமாக முடியும். வறட்டுத்தனமான இந்த 
எதிர்ப்பின் மூலம் மக்களின் அபிமானத்தை
காங்கிரஸ் இழக்க நேரிடும்.

புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றக் கூட்டம் 
நடைபெறும்போது ராகுல் காந்தியால் அக்கூட்டத்தில் 
பங்கேற்க இயலாது. ஏனெனில் அவர் தமது எம்பி 
பதவியை நீதிமன்றத் தீர்ப்பால் இழந்து 
விட்டார். எனவே புதிய கட்டிடத் திறப்பு 
விழா,  மோடி திறந்து வைக்கிறார் 
என்ற செய்தியே சோனியா காந்திக்கு எரிச்சல் 
ஊட்டுகிறது. எனவே காங்கிரசின் எதிர்ப்பு 
வரம்பை மீறுகிறது.    

காங்கிரசாலும் சரி, கம்யூனிஸ்டுகளாலும் சரி,
மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை 
எதிர்க்க முடியவில்லை. பாஜகவின் சித்தாந்தமான 
இந்துத்துவம் எனப்படும் இந்து தேசியவாதத்தை 
எதிர்கொள்ள இயலவில்லை. அவர்கள் செய்வதெல்லாம் 
நாடாளுமன்றப் புதிய கட்டிடக் திறப்பு விழாவைப் 
புறக்கணிக்கும் மக்களால் விரும்பப்ப்டாத 
செயல்கள் மட்டுமே.

வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிப்பதற்கோ அல்லது 
வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பதற்கோ 
நாடாளுமன்றப் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் 
ஒன்றுமில்லை! கொண்டாட்டங்கள் இயல்பானவை.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இந்தியாவின் 
சொத்து. இதை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர்.
எனவே எதிர்ப்புக் கூச்சலுக்கு மக்களிடம் வரவேற்பு
இல்லாமல் போவதில் வியப்பில்லை.
************************************************


எனவே திறப்பு விழாவை எதிர்க்கும் காங்கிரசின்    நீண்ட   இந்தியாவின் 

புதிய கட்டிடக் திறப்பு என்பது அரசியலில் 
ஒரு trivial matter. இதன் அளவை விடப் பலமடங்கு 
உருப்பெருக்கி வைத்துக்கொண்டு இதை அணுகுவது 
பேதைமையுள் எல்லாம் பேதைமை! மார்க்சிய 
லெனினிய அணுகுமுறையில் இது ஒரு TRIVIAL 
MATTER. இதை மிகை மதிப்பீடு செய்பவன்
ஒரு CLOWNஆக மட்டுமே இருக்க முடியும்.

போங்க போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தாப் 
பாருங்க! வேலை எதுவும் இல்லாதவன் டிவி 
சீரியல்களைப் போய்ப் பார்த்து விட்டு
விமர்சனம் எழுதுங்க, போங்க!!
-----------------------------------------------------------------
இந்தியாவின் அரசியல் எப்போதுமே மிகவும் நீண்டது.
இந்நீண்ட அரசியலில் நாடாளுமன்றத்தின் புதிய 
கட்டிடத் திறப்பு விழா என்பது உண்மையிலேயே 
ஒரு trivial matter. ஒரு மனிதனின் வாழ்வில் 60 அல்லது 
70 பிறந்த நாட்கள் வரும். இதில் ஒரு பிறந்த நாள் 
போன்றதுதான் நாடாளுமன்றத் திறப்பு விழா.
எனவேதான் மார்க்சிய லெனினியம் இதை 
trivial matter என்கிறது. Out of 60 or 70 birthday parties 
in a man's life one single party may be  trivial; is it not?

புதிய கட்டிடக் திறப்புவிழாவை அளவுக்கு மேல் 
பெரிதாக்கிக் கொண்டு அஞ்சுவதும் புலம்புவதும் 
பேதைமையுள் எல்லாம் பேதைமை.      


முக்கிய அறிவிப்பு!
------------------------------
Inaugural ceremony is TRIVIAL என்று கூறியுள்ளேன்.
அது ஒரு theorem ஆகும். எதிர்மறையான கமெண்ட் 
எழுத விரும்பும் அன்பர்கள் அருள்கூர்ந்து  
Inaugural ceremony is TRIVIAL என்ற எனது கூற்றை 
DISPROVE செய்த பின்னர் கமெண்ட் எழுதுமாறு 
கேட்டுக் கொள்கிறேன். 
  
  

     
 



  







 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக