திங்கள், 8 மே, 2023

 நீட் தேர்வு வினாத்தாள் கடினமா?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
பார்வை: NEET UG 2023 கேள்வித்தாள்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
எப்போதுமே Botany, Zoology படங்களில் 
கேள்வித்தாள் எளிதாக இருக்கும். அதற்குக் 
காரணம் அந்தப் பாடங்களின் தன்மை!

பெரிய அளவில் conceptual questions எவற்றையும் 
Botany, Zoologyல் கேட்க முடியாது. ப்ளஸ் டூ 
பாடத்திட்டத்தைப் பொறுத்து Botany, Zoologyல் 
knowledge, understanding சார்ந்த கேள்விகள் 
மட்டுமே கேட்கப்படும். சமயங்களில் 
application சார்ந்து கேள்விகள் வரும்.
Skill சார்ந்த கேள்விகளோ, conceptual questions
போன்ற கடினமான கேள்விகளையே 
Botany, Zoologyல் கேட்க இயலாது. அப்பாடங்கள்
அதற்கு இடமளிப்பதில்லை.

Chemistryல் ஓரளவுக்கு கடினத்தன்மை வாய்ந்த 
கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு chemistry 
இடமளிக்கும்.

அடுத்து Physics. இதன் தன்மை என்னவெனில் 
கடினமான கேள்விகளைத் தவிர வேறு எளிதான 
கேள்விகளைக் கேட்பதற்கு physics இடமளிக்காது.
எனவே எப்போதுமே physics portion கடினமாகவே 
இருக்கும். மானாவாரியாக conceptual questionsஐக் 
கேட்பது physics வினாத்தாள் தயாரிப்பவரின் 
இயல்பு. அத்தோடு physics always includes mathematic
என்பதால் sums உள்ள கேள்விகளைக் கேட்டு 
விடுவார்கள். இயற்பியல் ஆசிரியர்கள்.
எனவே எப்போதுமே physics கஷ்டமாகவே இருக்கும்.

சுருங்கக் கூறின்,
NEET UG வினாத்தாளைப்  பொறுத்தமட்டில்,
இதுதான் எப்போதும் உள்ள நிலவரம்!

Botany ..... Always Easy; fully easy.
Zoology.... 90% is ever Easy. 
Chemistry: 80% is ever easy and 20% is slightly difficult.
Physics: Physics portion is always TOUGH.
இதுதான் NEET.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: 
வீரவநல்லூரில் இசக்கிமுத்து அண்ணாச்சி கையில் 
NEET  வினாத்தாளை வைத்துக்கொண்டு சில 
தர்க்குறிப் பயல்களை செருப்பால் அடித்துக் கொண்டு 
இருக்கிறார். இடம்: வீரவநல்லூர் மோர் மடம்.
இசக்கிமுத்து அண்ணாச்சி இயற்பியலில் MSc படித்தவர் 
என்பதால் ஊரார் அவருடைய செயலுக்கு அங்கீகாரம் 
அளிக்கிறார்கள்.
*****************************************************
          
     

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக