புதன், 4 ஜனவரி, 2017

1) கண்டிப்புடனும் கறாராகவும் தமிழகத்தின்
வரலாறு எழுதப்படவில்லை. மெய்யான வரலாறு
என்பதற்குப் பதிலாக அவரவர் விருப்ப நோக்கில்
எழுதப்பட்ட வரலாறே நமக்கு கிடைத்து உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின்  ஆகப் பெரும்பான்மையினரான
தமிழறிஞர்களின் ஒருமித்த குரலான தைப்புத்தாண்டு
என்பதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அரசியல்
கட்சிகளின் கூற்றை, பரிசீலிக்க அருகதையற்றது
என்று புறந்தள்ளுவது போல அறிஞர்களின் கூற்றைப்
புறந்தள்ள இயலாது.   

2) மறைமலை அடிகள் ஒருவர் மட்டும் அல்லர்; ஓராயிரம்
தமிழறிஞர்கள் அவ்வாறு மொழிந்துள்ளனர். மறைமலை
அடிகளின் கூற்றை மறுப்பதன் மூலம், ஏனைய
அறிஞர்கள் அனைவரின் கூற்றையும் மறுத்து
விட்டதாக நிறைவு கொள்ளல் கூடாது.

3) தைப்புத்தாண்டு தமிழர் வரலாற்றில் வழக்கில்
இருந்தது என்பதற்கான நிகழ்தகவு (probability)
பூஜ்யம் என்று அறுதியிட இயலாது. பூஜ்யமற்ற
நிகழ்தகவாக ( non zero probability) அது இருக்கும்வரை
அதை ஏற்கத்தான் வேண்டும். இதுவே எமது நிலைபாடு.

4) இக்கட்டுரையும் அதில் பொதிந்துள்ள பரப்புரையின்
நோக்கமும் பொது சகாப்தம் என்னும் அறிவியல் வழியில்
உருவாக்கப்பட்ட  COMMON ERA என்னும் ஆண்டுக்
கணக்கை மக்களிடம் அறிமுகம் செய்வதே. நியூட்டன்
அறிவியல் மன்றம் மட்டுமே ஒட்டு மொத்தத்
தமிழ்நாட்டிலும் இந்தப் பணியை மேற்கொண்டு
வருகிறது என்பது ஒளி வீசும் உண்மையாகும்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக