செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஞாயிறு அன்று பொங்கல் வந்தால், ஏற்கனவே
விடுமுறை நாளான அன்று, பொங்கலுக்கும்
விடுமுறை என்று கொண்டால் என்ன ஆகும்?
ஊழியர்களுக்கு ஒரு விடுமுறை நஷ்டமாகும்.
ஆகையால் ஊழியர்களும் சரி, அவர்களின்
பிரதிநிதியான நலக்குழுவினரும் அப்படி
ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள்.


கட்டாய விடுமுறைப்
பட்டியலில் பொங்கல் என்றுமே இருக்கவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் பட்டியலை எடுத்துப்
பார்த்தால் இது புரியும். டாக்டர் மன்மோகன் பிரதமராக
இருந்தபோதும் சரி, இன்று மோடி பிரதமராக
இருக்கும்போதும் சரி, பொங்கல் என்பது கட்டாய
விடுமுறைப் பட்டியலில் இருந்ததே இல்லை.
விடுமுறைப் பட்டியல் தற்போது மாற்றப் படவில்லை.
ஏற்கனவே இருந்த பட்டியலில் எவ்வித மாற்றமும்
செய்யப் படவில்லை. இதுதான் உண்மை.

அந்தமான் நிகோபார் தீவுகள் தமிழ்நாட்டில் வராது.
அது தனியான ஒரு யூனியன் பிரதேசம். அங்குள்ள
மத்திய அரசு ஊழியர் நலக்குழு ( CGE Welfare Coordination Committee)
அவர்கள் விரும்பியபடி முடிவு எடுக்கும். அவர்கள்
பொங்கலுக்கு "மூடிய விடுமுறை" அறிவித்து
இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் BSNL நிறுவனம்
பொங்கலுக்கு விடுமுறை அறிவித்து இருக்கிறது.
இதற்கான உத்தரவுகளை வெளியிட்டு ஒரு பதிவும்
எழுதி இருக்கிறேன். அதையும் தாங்கள் படிப்பது நலம்.
**
அந்தமான் தீவுகளின் நலக்குழுவும் (WELFARE COMMITTEE)
BSNL என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனத்தின்
நலக்குழுவும் பொங்கலை விடுமுறையாக அறிவித்து
உள்ளன. இது அவர்கள் விருப்பம். அதுபோல,
தமிழ்நாடு நலக்குழு பொங்கல் விடுமுறை வேண்டாம்
என்று முடிவு எடுத்துள்ளது. காரணம் அன்று இரண்டாம்
சனி காரணமாக ஏற்கனவே விடுமுறை என்பதால்.
**
மத்திய அரசில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக
பணியாற்றி இருக்கிறேன். தொழிற்சங்கத்தில்
பல்வேறு உயர் பதவிகளில் பொறுப்பில் இருந்துள்ளேன்.
ஒவ்வொரு வருடமும் இந்த விடுமுறையில் பல்வேறு
கோரிக்கைகளை ஊழியர்களிடம் இருந்து பெற்று
நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளேன்.
**
தொழிற்சங்கங்கள் தொடர்பான விஷயங்களில்
மற்றவர்கள் விஷயம்  தெரியாமல் கருத்துச்
சொல்வது மக்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும்.
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக