புதன், 4 ஜனவரி, 2017

பார்ப்பனீயம், ஆரியம், சமஸ்கிருதம் ஆகிய
அனைத்தையும் ஒருசேர எதிர்த்துத் தூள்தூளாக்கிய
மறைமலை அடிகளை, பார்ப்பனீய விழுமியங்களை
மீட்பதற்கு முயற்சி செய்வதையே தம் வாழ்நாள்
கடமையாகக் கொண்டு மூசசு நிற்கும் வரை
பணியாற்றிய துக்ளக் சோவுடன் ஒப்பிடுவது
காழ்ப்புணர்ச்சி அல்லாமல் வேறு என்ன?
காரல் மார்க்ஸை அத்வானியுடன் ஒப்பிடுவது
போற அபத்தம் அல்லவா இது! அடுத்து மறைமலை
அடிகள் தமிழறிஞர் இல்லையென்றால், பின்
வேறு யார்தான் தமிழறிஞர்? உண்மைகளை
அங்கீகரிக்க மறுப்பது காழ்ப்புணர்ச்சியே.
இதில் ஒன்றும் முதலாளித்துவ எதிர்ப்புணர்ச்சி
இல்லை. மாறாக, குட்டி முதலாளித்துவ மனக்
கிலேசமே வெளிப்பட்டு நிற்கிறது.    


தமிழ்ப் புத்தாண்டு எது?
தையா சித்திரையா?
--------------------------------------------
தமிழ் நிலத்தில் நிலவுகிற
கருத்துகளைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில்,
ஆவணி, சித்திரை, தை ஆகிய மூன்று புத்தாண்டுகள்
வழக்கில் இருந்ததாக எமது பதிவுகள் கூறுகின்றன.

இவை மூன்றும், இன்றைய நிலையில்.
பண்பாட்டுப் புத்தாண்டுகளே அன்றி
சமூகத்தின் பண்ட உற்பத்தியில், சமூகத்தின்
ஆட்சி நிர்வாகத்தில் இல்லை என்பதால், அவை
பண்பாட்டுப் புத்தாண்டுகளாக எஞ்சி நிற்கட்டும்
என்று கூறுகிறோம்.

கால்குலஸ் கணிதத்தில்
INTEGRATION என்ற ஓர் முறை உண்டு. புத்தாண்டு
பற்றிய தமிழர் வரலாற்றைத் தொகுத்தால்,
அதாவது ZERO TO INFINITY வரை INTEGRATE செய்தால்,
இந்த மூன்றும் ( ஆவணி சித்திரை தை)
கிடைக்கின்றன. அவற்றைக் குறிப்பிடுகிறோம்.
இதில் எமது பணி வெறும் தொகுப்புதான். எந்த
ஒன்றையும்  நிறுவவோ மறுக்கவோ நான்
முயலவில்லை.

தைப்புத்தாண்டு தமிழர் மரபில் இல்லவே இல்லை
என்று  எவரும் கூறலாம். கூறுங்கள். அது
உங்களின் உரிமை. அது போல, தைப்புத்தாண்டு
இருந்ததாக நான் கூறுகிறேன். இது என்னளவில்
நான் வந்தடைந்த முடிவு. இது என் கருத்து.
இது நானே கண்டு பிடித்த்து நானே நிரூபித்த
தேற்றம் அல்ல.

இந்த இரண்டில், தைப்புத்தாண்டு
இருந்தது அல்லது இல்லை என்னும் இரண்டு
முன்மொழிவுகளில், எது சரி என்று முடிவு
செய்வது வரலாற்று அறிஞர்களின் பணி. அப்படி
எந்த முடிவும் ஏற்கத்தக்க விதத்தில் வரலாற்று
அறிஞர்களிடம் இருந்து வராத வரையில்,
இரண்டு முன்மொழிவுகளுமே சம அந்தஸ்தில்
உயிர்ப்புடன் இருக்கும். இதுதான் உண்மை.
இந்த உண்மையை ஏற்பதுதான் அறிவியல்
மனப்பான்மை.

கருதுகோள் (hypothesis) என்பது வேறு; தேற்றம் (theory)
என்பது வேறு. நிரூபிக்கப் பட்டால்தான் தேற்றம்
என்று ஏற்கப்படும். நிரூபிக்கப் படாதவரை அது
வெறும் கருத்துத்தான். தைப்புத்தாண்டு இருந்தது
என்பதும் ஒரு சாராரின் கருத்துத்தான்; இல்லை
என்பதும் ஒரு சாராரின் கருத்துத்தான். இவ்விரு
சாராரின் கருத்துக்களில் எந்த ஒன்றுமே இதுவரை
அனைவரும் ஏற்கத் தக்க விதத்தில் நிரூபிக்கப்
படவில்லை. எனவே இரண்டு கருத்துக்களுமே
இன்று மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கின்றன.  
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக