செவ்வாய், 3 ஜனவரி, 2017

தமிழ்ப் புத்தாண்டு என்பதில் தமிழ் என்பது
அடைமொழி. அந்த அடைமொழியை நீக்கி விட்டு
வேறு ஒன்றைப் பெய்வது என்பதை தமிழ் ஆர்வலர்கள்
எவரும் ஏற்க மாட்டார்கள்.

ஐயா,
கிருஸ்துவ சகாப்தம் (Christian Era) என்ற பழைய
பெயெரெல்லாம் முடிந்து போன கதை. இனி
எல்லாமே பொது சகாப்தம்தான். (COMMON ERA).
இந்தப் பொது சகாப்தத்தை எந்தப் பாதிரியாரோ
போப்பாண்டவரோ அறிவிக்கவில்லை. காலண்டரில்
திருத்தம் செய்யும் உரிமை அறிவியல் அறிஞர்களிடம்
வந்து விட்டது.
**
இனி எந்தப் போப்பாண்டவரோ, தலைமை ஹாஜியோ,
 மஹா சந்நிதானமோ காலண்டரில் கை வைக்க முடியாது.
மேலை நாடுகளில் பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி
என்ற பதங்கள் அகற்றப் பட்டு விட்டன. 
**
எனவே, கிறிஸ்துவ சகாப்தம் இனி நடப்பில் இல்லை
என்ற உண்மையை, மொத்தத் தமிழ்நாட்டிலும்
எங்களின் நியூட்டனின்  அறிவியல் மன்றம் மட்டுமே
பரப்பி வருகிறது. பல ஆண்டுகளாகவே இப்பணியை
யாம் மேற்கொண்டு வருகிறோம்.
**
இந்தப் புதிய ஆண்டுக்  கணக்கீடு முறையின் பெயர்
பொது சகாப்தம் ஆகும். அந்தப் பெயரால் அதை
அழைத்தால் போதும். அதற்கு உதவி செய்யவே
அறிவியல் புத்தாண்டு என்ற பதம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக