செவ்வாய், 10 ஜனவரி, 2017

அந்தமானில் பொங்கலுக்கு விடுமுறை உண்டு!
காரணம், அங்குள்ள ஊழியர் நலக்குழு
அப்படி முடிவு எடுத்துள்ளது!
------------------------------------------------------------------------------------------
அந்தமான் நிகோபார் தீவுகள் என்பது ஒரு யூனியன்
பிரதேசம். இது தமிழ்நாட்டில் வராது. என்றாலும்
இங்குள்ள மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு
பொங்கலுக்கு விடுமுறை வேண்டும் என்று முடிவு
எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் BSNL நிறுவனம் பொங்கல் விடுமுறை
வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளது. இதற்கான
உத்தரவுகளை வெளியிட்டு, ஏற்கனவே ஒரு பதிவு
எழுதி உள்ளேன்.

இங்கு கவனிக்க வேண்டியது என்ன?
--------------------------------------------------------------------
மேற்கூறிய உதாரணங்கள் தெரிவிப்பது என்ன?
பொங்கலுக்கு விடுமுறை வேண்டுமா வேண்டாமா
என்று தீர்மானிப்பது யார்? மத்திய அரசு அல்ல.

அந்தந்த மாநிலத்தில் உள்ள, ஊழியர்களின்
நலக்குழுதான் முடிவு எடுக்கிறது.

தமிழ்நாடு ஊழியர் நலக்குழு என்ன முடிவு எடுத்தது?
அன்றைக்கு (14.01.2016)  இரண்டாம் சனிக்கிழமை
என்பதால், ஏற்கனவே அது விடுமுறைதான் என்பதால்,
பொங்கலுக்கு விடுமுறை வேண்டாம் என்று முடிவு
எடுத்தது.

இவையெல்லாம் தொடர்புடைய  ஊழியர்கள்,
அவர்கள் தொழிற்சங்கங்கள், அவர்களின் நலக்குழுக்கள்
எடுக்கும் முடிவு. விஷயம் என்னவென்றே தெரியாமல்
மற்றவர்கள் இதில் புகுந்து கருத்துச் சொல்லி
மக்களைக் குழப்ப வேண்டாம்.

இன்னொரு முக்கிய விஷயம். கடந்த சுமார் 10
ஆண்டுகளாக,  பொங்கல் என்பது கட்டாய விடுமுறைப்
பட்டியலில் ஒருபோதும் இருந்தது இல்லை.
எனவே கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து
அது நீக்கப் பட்டுள்ளது என்பது தவறான கூற்று.

டாக்டர் மன்மோகன் பிரதமராக இருந்தபோதும் சரி,
இன்று மோடி பிரதமராக இருக்கும்போதும் சரி,
பொங்கல் என்பது கட்டாய விடுமுறைப் பட்டியலில்
இருந்ததே இல்லை; இல்லவே இல்லை. இல்லாத ஒன்று
எப்படி நீக்கப்பட முடியும்?
********************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக