திங்கள், 13 மார்ச், 2017

மூன்று தலாக்கை எதிர்க்கும்
இஸ்லாம் பெண்களின் 
வாக்குகளால் பாஜக 325 பெற்றது.

ஜெயா சமாதியில்
நாளை சபதம் எடுக்கிறேன்!
அனைவரும் வருக ஆதரவு தருக!
உலகம் அழிய வேண்டும் எனும் சபதம்

உபியில் தலித் வாக்குகளை
பாஜக பெற்றது எப்படி?
--------------------------------------------------
யாதவர்களின் ஆட்சி என்றாலே, அதிலும் முலாயம்,
அகிலேஷ் ஆட்சி என்றாலே, அது தலித் விரோத ஆட்சி
என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும்.
அகிலேஷின் ஆட்சி ஒரு காட்டாட்சி (JUNGLE RAJ)
என்பதும், அங்கு கொடுமைக்கு இலக்கான தலித்துகள்
கொடுமை இழைத்த யாதவ்களுக்கு எதிராக
எந்தக் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க
முடியாது என்பதும் அங்குள்ள இயல்பான நிலவரம்.

மாயாவதி தங்களை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை
தலித்துகள் இழந்து பல காலம் ஆகி விட்டது.
மாயாவதி கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித
அரசியலும் செய்யவில்லை. ஆயிரம் தலைமுறைக்கு
காணும் அளவுக்கு கொள்ளையடித்துச் சேர்த்து
வைத்திருக்கும் சொத்துக்களைப் பாதுகாப்பதில்
மட்டுமே கவனம் செலுத்தினார். எனவே
சமாஜ்வாதியின் கொடுமைகளில் இருந்து
தப்பிக்க மாயாவதியை நம்ப முடியாது என்று
தலித் மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர்.

அடுத்து காங்கிரஸ் கட்சி. பூத் ஏஜென்ட்
போடுவதற்குக் கூட வக்கில்லாத ராகுலின்
காங்கிரஸ் கட்சியால் தங்களுக்குப் பாதுகாப்புத்
தர இயலாது என்று தலித்துகள் தெளிந்தனர்.

எனவே யாதவ்களிடம் இருந்தும் சமாஜவாதி
கிரிமினல்களிடம்  இருந்தும் பாஜக மட்டுமே
தங்களுக்குப் பாதுகாப்புத் தரும் என்பதும்
சமாஜ்வாதிகளை எதிர்த்து நிற்கும் வலிமையுள்ள
கட்சி பாஜக மட்டுமே என்றும் தலித்துகள்
முடிவு செய்தனர். தங்களின் வாக்குகளை
பாஜகவுக்கு அள்ளி வழங்கினர்.

இதன் விளைவாகவே பாஜகவால் வரலாறு காணாத
அளவில் 325 இடங்களைப் பெற முடிந்தது.
**************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக