திங்கள், 13 மார்ச், 2017

முதல் முறையாக உபியில்
பெண் MLAகள் அதிகம்! புள்ளி விவரங்கள்!
----------------------------------------------------------------------------
உபி மொத்த இடங்கள்=403
இந்த 403இல் பெண்கள்= 38.

ஆணாதிக்கம் நிறைந்த உ.பி.யில் இந்த 38 பெண்கள்
என்பது மிகவும் பெரிய விஷயம் ஆகும். உபி வரலாற்றில்
இந்த 38 என்பது இதுவரை இல்லாதது.

கட்சிவாரியாக பெண் MLAகள்:
------------------------------------------------------
பாஜக= 32
காங் = 2
சமாஜவாதி=1
பகுஜன்= 2
அப்னாதள் (பாஜக கூட்டணிக்கட்சி)=1
மொத்தம்=38

இத்தேர்தலில் 43 பெண்களுக்கு பாஜக டிக்கட்
கொடுத்து இருந்தது. இந்த 43இல் 32 பேர் வென்றனர்.
2012இல் நடந்த தேர்தலிலும் பாஜக 42 பேருக்கு டிக்கட்
கொடுத்தது. ஆனால் இந்த 42 பேரில் 7 பெண்கள்
மட்டுமே வென்றனர்.

ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவக் கட்சியான
பிற்போக்கு சமாஜ்வாதிக் கட்சியில் பெண்களுக்கு
இடம் என்பது மிக அற்பமே. மீறிக் கொடுப்பதாக
இருந்தால், முலாயம் குடும்பப் பெண்களுக்கு மட்டுமே
இடம். இத்தேர்தலில் அகிலேஷின் கொழுந்தியாள்
38,000 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணைக்
கவ்வியது குறிப்பிடத் தக்கது.
------------------------------------------------------------------------------------
தகவல் ஆதாரம்:
TIMES OF INDIA CHENNAI 13 MARCH 2017 பக்கம்-10
அகிலேஷின் மனைவி ஏற்கனவே MP என்பது
அனைவரும் அறிந்ததே.
**************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக