வியாழன், 2 மார்ச், 2017

(6) மீத்தேன், ஹைட்ரோ கார்பன் குறித்து
சிந்தனைக் குள்ளர்கள் பரப்பி வரும்
கடைந்தெடுத்த பொய்களும் அவற்றின்
முதுகெலும்பை முறிக்கும் பதில்களும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) சொல்லப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் பொய்;
எழுதப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் பொய்
என்ற அளவில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு
முகாமில் இருந்து பொய்கள் புற்றீசலாய்க் கிளம்பி
வந்து கொண்டு இருக்கின்றன.

2) அறிவியலுக்கே எதிரான கருத்துக்கள் அறிவியல்
கட்டுரைகள், அறிவியல் வீடியோக்கள் என்ற பெயரில்
வந்து கொண்டு இருக்கின்றன.

3) இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது என்ற
நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

4) நெடுவாசல் திட்டத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் தேவைப்
படும் என்று ஒரு "அறிவியல் அறிஞர்(!)" கூறுகிறார்.

5) நீரியல் விரிசல் முறை (Hydraulic fracture) பற்றி
விளக்கி பல்வேறு அறிவியல் போலிகள் கட்டுரை,
வீடியோ என்ற பெயரில் தங்களின் அறியாமையை,
தற்குறித் தனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

6) நீரியல் விரிசல் முறை குறித்தும் மீத்தேன்
எடுக்கும் தொழில்நுட்பம் குறித்தும் நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏன் இதுவரை கட்டுரை
எழுதவில்லை என்று நம் அன்புக்குரிய வாசகர்கள்
நம்மிடம்  கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

7) நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் "நீரியல்
விரிசல்" முறை பயன்படுத்தப்படும் என்று கருதுவதற்கு
இதுவரை எந்த விதமான ஆதாரமும் இல்லை.
என்ன தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் என்று
சம்பந்தப்பட்ட எவரும், அதாவது, மத்திய அரசோ,
மாநில அரசோ, ONGC நிறுவனமோ, உரிமம் பெற்றுள்ள
ஜெம் லபாரட்டரீஸ் நிறுவனமோ இதுவரை
அறிவிக்கவில்லை.

8) இந்நிலையில் நாமாக எதையாவது கற்பனை
செய்து கொண்டு சுயஇன்பம் அனுபவிக்க
நியூட்டன் அறிவியல் மன்றம் தயாராக இல்லை.

9) முகநூல் மற்றும் வாட்ஸாப்பின் பிரபல
எழுத்தாளர்களான(!!) குட்டி முதலாளித்துவ
சிந்தனைக் குள்ளர்களும் சுயஇன்பவாதிகளும்
பைபிளில் கூறப்பட்ட பிரளயமே நெடுவாசலுக்கு
வந்து விட்டது போல மரண ஓலம் இடுகிறார்கள்.

10) இவர்களின் SOS அழைப்புகள் அனைத்தையும்
அறிவியலுக்கு எதிரானது என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.      

11) நமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போலி
அறிவியல் செய்திகளை நியூட்டன் அறிவியல்
மன்றம் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்து வருகிறது.
அவை அனைத்துக்கும் முதுகெலும்பை முறிக்கும்
பதில்களை நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கும்.
*******************************************************************
பின்குறிப்பு: முதல் கமென்டில் ஒரு வீடியோ இணைக்கப்
பட்டுள்ளது. வாசகர்கள் அதை படிக்கலாம்.
அதன் முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் விரைவில்.
------------------------------------------------------------------------------------------------------


  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக