ஞாயிறு, 12 மார்ச், 2017

அகிலேஷ் யாதவின் கொழுந்தியாள்
அபர்ணா யாதவ் லக்னோ canttல்
33796 வாக்குகளில் தோல்வி!

இத்தொகுதியில் ரீட்டா பகுகுணா ஜோஷி
அபர்ணாவைத் தோற்கடித்தார். இவர் தேர்தலுக்கு
முன், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில்
சேர்ந்தவர்.

முழுப்பொய். மின்னணு இயந்திரங்களைக் கொண்டு
மோசடி செய்ததாகக் கூறுவது பொய்.

தென்னிந்தியாவில் கேரளத்தில் மட்டுமே
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு MLAக்கள் உள்ளனர்.
CPI+CPM=80 என்று ஒரு அதிகபட்சமான கணக்கை எடுத்துக் கொள்ளலாம். அடுத்து திரிபுரா. அடுத்து மேற்கு வங்கம்.
வேறெந்த மாநிலத்திலும் MLAக்கள் இல்லை. இடதுசாரிக்
கூட்டணி என்ற பெயரில் உள்ள இடங்களை எல்லாம்
கம்யூனிஸ்ட் கணக்கில் வரவு வைக்க வேண்டாம். 

தத்துவம் இல்லாத நடைமுறை!
இரோம் ஷர்மிளா ஒரு உதாரணம்!
--------------------------------------------------------------
இரோம் ஷர்மிளா ஒரு நியாயமான கோரிக்கையை
முன்வைத்து போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆயுதப் படிக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து
செய்ய வேண்டும் என்பது அவரின் கோரிக்கை.

அவர் தமக்கு வழிகாட்டும் தத்துவமாக மார்க்சிய
லெனினியத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் வழிகாட்டும் தத்துவம் எதுவும் இல்லாமல்
போராட்டத்தை 16 ஆண்டுகள் தொடர்ந்தார்.
இது ஆற்றலை வீணடித்தல் ஆகும்.

பின்னர் நல்ல முடிவெடுத்து உண்ணா விரதத்தை
முடித்தார். இது சரியான முடிவு. ஆனால் அடுத்து
உடனே  "நான் முதலமைச்சர் ஆவேன்" என்று
அறிவித்து ஒரு கட்சியை அவரே தொடங்கினார்;
தேர்தலில்  நின்றார்.

90 வாக்குகள் மட்டுமே பெற்றார். உடனே தேர்தலுக்கு
முழுக்கு என்கிறார். இவை எதுவும் புரட்சிகர
தத்துவத்தால் வழிகாட்டப்பட்ட செயல்கள் அல்ல.
இவை அனைத்தும் தனிநபர் சார்ந்த குட்டி
முதலாளித்துவச் செயல்பாடுகள் ஆகும்.
*********************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக