வெள்ளி, 22 ஜூன், 2018

பேராசிரியர் டாக்டர் தெய்வசுந்தரம் அவர்கள்
ஞானிக்கு மறுப்பு என்னும் எனது கட்டுரையை
ஒட்டி கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை
முன்வைத்துள்ளார். வாசகர்களின் பார்வைக்காக.
------------------------------------------------------------------------------------------
தங்களுடைய விவாதத்தில் நான் எதிர்பார்ப்பது .....

ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவங்களான
பொருள்முதல்வாதம், வரலாற்றுப்பொருள்முதல்வாதம்
ஆகியவற்றைப்பற்றியதில் மேற்குறிப்பிட்டவர்கள்
வேறுபடுகிறார்களா இல்லையா?

இரண்டு.... மார்க்ஸ, எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின்,
மாவோ ஆகியோர் மேற்குறிப்பிட்ட தத்துவ அடிப்படைகளைப்
பயன்படுத்தித் தங்கள் காலகட்ட சமூக அமைப்புகளை
ஆய்வுசெய்ததில் மேற்குறிப்பிட்டவர்கள் வேறுபடுகிறார்களா?
இல்லையா?

மூன்று.... அவர்களுடைய (மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்,
ஸ்டாலின், மாவோ) ஆய்வுமுடிவுகள் சரியாக இருந்து,
ஆனால் அவர்கள் நடைமுறையில் அவற்றைச்
செயல்படுத்தியதில் மேற்குறிப்பிட்டவர்கள்
வேறுபடுகிறார்களா?

நான்கு, இந்தியாவின் இன்றைய சமூகச் சூழல் மார்க்ஸ்
முன்வைத்த சமூக வளர்ச்சி விதிகளைத் தவறு என்று
கூறும்வகையில் இருக்கிறது என்று முன்குறிப்பிட்டவர்கள்
கூறுகிறார்களா?

ஐந்து.... இந்தியாவில் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களில்
இங்குள்ள கட்சிகள் (எந்தெந்த கட்சிகள்) மார்க்சியத்தைத்
தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்டுக்
கொண்டிருக்கிறார்களா?

ஆறு..... இந்தியாவில் அதற்கான அரசியல் போராட்டங்களில்
முன்குறிப்பிட்ட ''மார்க்சியத்தைச் சரியான திசையில்
வளர்த்தெடுக்க விரும்பும்'' மேற்குறிப்பிட்டவர்கள் தங்களது
''சரியான பாதையில்'' ஈடுபட்டு, தாங்கள் இப்போது
முன்வைக்கிற 'மார்க்சியத் திருத்தல்களை'
முன்வைக்கிறார்களா?

இவ்வாறு குறிப்பாகத் தாங்கள் விவாதத்தை முன்கொண்டு
சென்றால், நாங்கள் அதைப் புரிந்துகொள்வது எளிதாக
இருக்கும் என நினைக்கிறேன். இவைபோன்று அடிப்படை
வினாக்களைத் தெளிவாக முன்வைத்து, அவற்றிற்கு விடை
கண்டால் நல்லது என நினைக்கிறேன்
---------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக