சனி, 9 ஜூன், 2018

இதுதானே இன்றைய நடப்பு! இது என்ன பராசக்தி
காலமா? இது கார்ப்பொரேட் யுகம். ரஜனி ஒரு
கார்ப்பொரேட் ஹீரோ. ரஞ்சித் ஒரு கார்ப்பொரேட்
டைரக்டர். காலா ஒரு successful கார்ப்பொரேட் படம்.

தயவு தாட்சண்யம் பார்க்க இயலாது!
-------------------------------------------------------------------
வடிவம், உள்ளடக்கம் (form and content) என்ற
இரண்டையும் மார்க்சியம் ஒன்றாக இணைந்திருக்கும்
ஒரு பைனரி  அமைப்பாகப் பார்க்கிறது.
இரண்டுக்கும் இடையே உறவு உண்டு என்கிறது
மார்க்சியம். இதன் பொருள் உள்ளடக்கத்துக்கு
ஏற்ற வடிவம் இருத்தல் வேண்டும் என்பதே.

இந்தக் கட்டுரையில் உள்ளடக்கத்துக்கு ஏற்ற
வடிவத்தைக் கையாளும்போது, அனிச்சப்
பூக்களைப் போல் தாங்கள் வாடி விடுவதாகச் 
சிலர் கருதலாம்.  இது கள யதார்த்தத்தை (ground reality)
கணக்கில் கொள்ளத்  தவறுவதாகும்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல
எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது.
கார்ப்பொரேட்  கயவர்கள் அடித்தட்டு மக்களை
சக்கையாக ஏமாற்றிக் கொண்டு இருக்கும்போது
இனிய உளவாக இன்னாத கூறல்...... என்ற
வள்ளுவப் போதனையை மேற்கொள்ள இயலாது.
ஈவிரக்கம் இன்றி கார்ப்பொரேட் கயமையை
அமபலப் படுத்த வேண்டும். அதில் தயவு
தாட்சண்யம் பார்க்கக் கூடாது.
 
இவர்தான் மறைந்த தோழர் சாரு மஜூம்தார்.
நக்சல்பாரி இயக்கத்தின் CPI ML கட்சியின்
ஸ்தாபகத் தலைவர். இந்தியாவின்  மாபெரும்
புரட்சியாளர். 

இவர்தான் மறைந்த தோழர் கொண்டப்பள்ளி சீதாராமையா.
நக்சல்பாரி இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில்
ஒருவர். மக்கள் யுத்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்.
Founder leader of CPI ML PEOPLES WAR 

இதுதாண்டா நிலத்துக்கான படம்!
---------------------------------------------------------------
எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மாபூமி என்னும்
தெலுங்குப்படம் 1980களில் வெளிவந்த படம்.
நிலத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடிய
தெலுங்கானா விவசாயிகளைப் பற்றிய
படம் இது. இதுதான் நிலத்துக்கான படம்.
காலா அல்ல, மூடர்களே. சர்தார் வல்லபாய்
படேல்-நேருவின் ராணுவத்தையும்  ஹைதராபாத்
நிஜாமின் ராணுவத்தையும்  எதிர்த்து தெலுங்கானா
விவசாயிகள் நடத்திய ஆயுதம் தாங்கிய
போராட்டம் இது. இதை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்
கட்சி வழிநடத்தியது. மகத்தான தெலுங்கானா
போராட்டத்தின் நாயகர்கள் தோழர்கள்
சுந்தரய்யா, பசவ புன்னையா ஆகியோர்.
இந்தப்படத்தை அடுத்த கமெண்டில் (யூடியூப்
வீடியோவை) கொடுத்துள்ளேன். தெலுங்கு
தெரியாவிட்டாலும் பார்க்கலாம். இப்படம்
ஆங்கிலத் துணைத் தலைப்புகளைக் கொண்டது.



நிங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி!
--------------------------------------------------------------------
1970களில் வெளிவந்த நிங்கள் என்னைக் கம்யூனிஸ்ட்
ஆக்கி என்ற மலையாள படத்தைப் பாருங்கள்.
பிரேம் நசீர், சத்யன், ஷீலா நடித்த படம். தோழர்
ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் பாராட்டிய
படம். அடுத்த கமெண்டில் அப்படத்தின் யூடியூப்
வீடியோவைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்.
   

மூன்று சினிமாக்கள்
------------------------------------
நண்பர்களே,
பின்னூட்டங்களில் மூன்று சினிமாக்களை, அவற்றின்
யூடியூப் வீடியோக்களைக் கொடுத்துள்ளேன்.
1. மாபூமி தெலுங்குப்படம்
2. நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி (மலையாளம்)
3. துலாபாரம் (தமிழ்)
இப்படங்கள்தான் உழைக்கும் மக்களைப் பற்றி,,
அவர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் பற்றிப்
பேசும் படங்கள். பாருங்கள்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக