சனி, 16 ஜூன், 2018

தோழர் சுரேஷ் விஜயராஜன் (comrade)

நீயூட்டன் அறிவியல் மன்றம் வைத்திருக்கும் கூட்டம். நீட்டைக் கூட நீட்டா ஆதரித்த ஆட்கள்.
Manage


LikeShow more reactions
4h
தோழர் சுரேஷ் விஜயராஜன் அது கிட்ட ஏது அழித்தொழிப்பு அரசியல்
Manage


LikeShow more reactions
4h
Malathi Maithri பின் என்ன அரசியலில்?
Manage


LikeShow more reactions
4h
தோழர் சுரேஷ் விஜயராஜன் கூடங்குளம் அணுமின் நிலையம்... பாதுகாப்பனதல்ல என்று குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன.
கூடங்குளம் உலைகள் WWER (water water energy reactor ) எனப்படும் உருசியத் தொழில்நுட்பத்தால் ஆனவை. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் "விவிஇஆர்" உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவி
ய அணு உலைத் தொழில்நுட்பத்தில் இது மிக உயர்ந்ததாகும். இது மிக உச்சக்கட்ட பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் 'காண்டு உலைகள்', ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷியாவின் 'விவிஇஆர்' உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை.

கூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் அழுத்த நீர் அணுஉலைகள் வகையைச் சேர்ந்தவை. இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். 'மட்டுப்படுத்தி' (Moderator) ஆகவும் 'குளிர்விப்பி' (Coolant) ஆகவும் சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் பயன்படுத்தப்படவில்லை. ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில் அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும். இதற்காக

எதிர்மறைப் புரைக் கெழு (Negative void coefficient)
எதிர்மறைத் திறன் கெழு (Negative power coefficient)
ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு, காற்று மண்டலத்தில் கலப்பது என்பது நடைபெறாது. எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல யுரேனியம் எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும். மேலும் பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டுமொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுள்ள ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாது. ஒருவேளை ஹைட்ரஜன் தீப்பற்றி எரிந்து விடலாம் என்பதற்காக அவ்வாறு நேரும்போது அது தண்ணீராக மாற்றப்பட்டு விடும் வகையில் ஹைட்ரஜன் சேர்ப்பான்கள் (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு-குளிரூட்டி VVER-1000
மேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது உயிர்ச்சேதம் நேராவண்ணம் தானாகவே இயங்கும் "மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு" (Passive Heat Removal System) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத்தைத் தணித்து விடும்.

அணு உலையும், அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால், அலைகள் கூட தொட முடியாத உயரத்தில் தான் உலை அமைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே ஆகும். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கூடங்குளம் உலையில் கதிர்வீச்சு வெளியேறாது என்பது கூடங்குளத்தை ஆதரிக்கும் அறிவியலாளர் கருத்தாகும்.
மேற்கோள்கள் தொகு
பி.இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம் , சென்னை 94. அவர்கள் எழுதிய கட்டுரை.'அறிவியல் ஒளி' , டிசம்பர் 2011 இதழ்

Manage


LikeShow more reactions
3hEdited
தோழர் சுரேஷ் விஜயராஜன் அறிவியலின் பெயரால்
ஆளும் வர்க்க மக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் மார்க்சிய முகமூடி போர்த்திய கூட்டம்

Manage


LikeShow more reactions
3h
தோழர் சுரேஷ் விஜயராஜன் ஸ்டெர்லைட்டை மூடுவது தீர்வாகாது என்றும் சொல்கிறது
Manage


LikeShow more reactions
3h
தோழர் சுரேஷ் விஜயராஜன் அழித்தொழிப்பு செயலுத்தி விமர்ச்சனத்திற்குட்பட்டது தான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்திய நக்சல்பாரி கட்சி ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தம்மை தெளிவாக நிலைநிறுத்திக் கொண்டது அந்த அரசியல் பாரம்பரியத்தின் எந்த ஒரு பகுதியிலும் அடையாளப்படுத்த வகையற்ற இந்த கூட்டத்திடம் என்ன நீங்கள் கண்டீர்கள் தோழரே
Manage


LikeShow more reactions
2hEdited
Malathi Maithri இக்கூட்டம் நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்ட பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் முரணைச் சுட்டவே பதிவு. அழித்தொழிப்பு அரசியல் பேசும் நக்சல் அமைப்புகள் மீது விமர்சனமிருக்கிறது அதை விவாதிக்க முகநூல் இடமல்ல.
Manage


LikeShow more reactions
2h


ராஜிவ் படுகொலையில் யாருக்கெல்லாம் பங்கு?
--------------------------------------------------------------------------------------
ராஜிவ் படுகொலை என்பது சர்வதேச அளவிலான
சதிவலைப் பின்னலை உள்ளடக்கியது. உலகின்
பிரபலமான உளவு நிறுவனங்களின் பங்கு
இதில் உண்டு. படுகொலைக்குப் பின்னர்
NGOக்களின் பங்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

ஈழ ஆதரவு கோஷங்களை முழங்குவோரில்
உண்மையான அக்கறையுடன் இருப்போர்
மிகவும் சொற்பம். மீதி அனைத்தும்  வாங்கிய
வாங்கப்போகும் காசுக்காகக் கூவும் கைக்கூலிகளே.

இவை அனைத்தும் எமது தொடரில் அம்பலப்
படுத்தப்படும். ஒரேநாளில் இது முடியாது.
இதை வாசகர்கள் உணர வேண்டும்.

கட்டுரையைச் சரியாகப் படிக்கவும். உச்சநீதி
மன்றத் தீர்ப்பில் உள்ள வாசகங்களும்,
பேரறிவாளன் தரப்பு மூத்த வழக்கறிஞர்
நடராசன் அவர்கள் முன்வைத்த வாதங்களும்
இங்கு கட்டுரையாக ஆக்கப் பட்டுள்ளன. ஒரு
நீண்ட கட்டுரைத் தொடரில் ஒரு கட்டுரை இது.
நிற்க.
ஈழ விடுதலைப் போர் ஆதரவில் 30 ஆண்டுகளாகத்
தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஒருவரின் கட்டுரை

இது. எமது முந்திய கட்டுரைகளையும் படிக்கவும்.

குட்டி முதலாளித்துவ நபர்கள் முகநூலில் ஒரு
பதிவு போட்டு விட்டால், ஈழ ஆதரவாளர் என்று
பொருள் கிடையாது. அது சுய இன்பம் ஆகும்.
எனவே எச்சரிக்கையுடன் பேசுமாறு வேண்டுகிறேன்.  


1991ல், அதாவது, இன்றைக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு
46 ரூபாய் என்பது இன்றுள்ள மதிப்பு அல்ல.
இது போன்ற வோல்டேஜ் கூடிய பாட்டரிகளுக்கு
அதுவும் கோல்டன் பவர் நிறுவனத்தின்
தயாரிப்புகளுக்கு பில் போடுவதும் காரண்டி
(guarantee) தருவதும் வாடிக்கை. நான் பலமுறை
பாட்டரி வாங்கியவன் என்ற முறையில் இதை
அறிவேன். நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் தெரிந்த
மூத்த தோழர்களிடம் விசாரித்து அறியலாம்.
கோல்டன் பவர் எல்லாக் கடைகளிலும் கிடைக்காது.

கடைக்காரன் தருகிற காரண்டியையும்
பில்லையும் வாங்குவதுதான் இயல்பான செயல்.
எனக்கு காரண்டி வேண்டாம், பில்லும் வேண்டாம்
என்று வாங்க மறுப்பதுதான் சந்தேகத்துக்கு
உரிய செயலாகும். தன்னுடைய செயல்
இயல்பானதாக இருக்க வேண்டுமே தவிர,
இயல்புக்கு எதிரானதாக இருந்து சந்தேகத்தை
ஏற்படுத்தக் கூடாது என்பதில்
சம்பந்தப் பட்டவர்கள் கவனமாக இருப்பார்கள்.
.

அருள்கூர்ந்து சிந்தித்துப் பார்த்து விஷயங்களைப்
புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Trivial matters அனைத்துக்கும் என்னால் விளக்கம்
கொடுத்துக் கட்டுப்படி ஆகாது என்பதை
அருள்கூர்ந்து கணக்கில் கொள்ளும்படி
வேண்டுகிறேன்.



27 ஆண்டுகளுக்கு முந்திய விஷயம்
ராஜிவ் படுகொலை!
===========================
ராஜிவ் படுகொலை நடந்தது 1991ல்.
1991ல் இந்தியாவின் மக்கள் தொகை 83 கோடி மட்டுமே.
அன்று மொபைல் போன் கிடையாது. லேண்ட் லைன்
தொலைபேசிதான். அதுவும் எல்லார் வீட்டிலும்
கிடையாது. வெறும் 4  சதம் பேரிடம்தான்  அன்று
தொலைபேசி இருந்தது.

அன்றைக்கு யூடியூப் கிடையாது. முகநூல்
(பேஸ்புக்) கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக
மொபைல் போனே கிடையாது. இன்னும் நிறைய
கிடையாதுகள். எமது கட்டுரையைப் படிக்கும்
இளைஞர்கள் இதையெல்லாம் மனத்தில்
கொண்டு, சிந்தித்துப் புரிந்து கொள்ளுமாறு
வேண்டுகிறேன். 





,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக