ஞாயிறு, 3 ஜூன், 2018

தூத்துக்குடி மாசு! உண்மையான காரணம்!
உண்மையான குற்றவாளி யார்?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
தூத்துக்குடி நகரும் அதைச் சுற்றியுள்ள பல
கிராமங்களும் மாசடைந்து விட்டன. மண், நீர்,
காற்று ஆகியவை மாசு பட்டுக் கிடக்கின்றன.
இதற்குக் காரணமான ஆலைகள்:
------------------------------------------------------------
1. வி வி மினரல்ஸ் குழுமத்தின் ஆலையான
  வி.வி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஏற்படுத்தும் மாசு = 50 சதம்.
2. ஸ்பிக்  (SPIC) = 30 சதம்.
3. அனல் மின் நிலையம் =10 சதம்.
4. பிற = 10 சதம்.
(ஸ்டெர்லைட் மூடிக்கிடக்கிற நிலையில் எடுக்கப்பட்ட
ஆய்வு முடிவு இது)

தூத்துக்குடியில் மீள விட்டான் கிராமத்திலும்
சுற்றுப்புற கிராமங்களிலும் மண், நீர், காற்று
ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வுகள்
பரிசோதனைகள் நடத்தி, அவற்றில் கிடைத்த
முடிவுகளின் (RESULTS) அடைப்படையில்
வைகுண்டராஜன் அவர்களின் ஆலையான
வி வி மினரல்ஸ் ஆளையும் ஸ்பிக்குமே
தூத்துக்குடி மாசுக்குக் காரணம் என்று
உறுதிபடக் கூறுகிறோம்.

எனவே ஸ்டெர்லைட்டை மூடினாலும் மக்களுக்கு
எப்பயனும் விளையாது என்ற நிலையே நீடிக்கிறது.
விவி மினரல்ஸ் நிறுவனத்தின் ஆலையை மூடாமல்
தூத்துக்குடிக்கு விடிவே கிடையாது/

வி வி மினரல்சுக்கு எதிராகவும் வைகுண்டராஜனுக்கு
எதிராகவும் குரல் கொடுக்காத எவனும்
வைகுண்டராஜனின் கைக்கூலியே.

இதை நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.
எவர் காதிலும் ஏறவில்லை. எனவே மீண்டும்
கூறுகிறோம்.

வைகுண்டராஜனை எதிர்க்க ஒரு பயலுக்கும்
ஒரு அமைப்புக்கும் துணிவோ தைரியமா கிடையாது
என்று அடித்துக் கூறுகிறோம்.
***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக