திங்கள், 25 ஜூன், 2018

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சாதனை!
சமூக மாற்றம் என்பது இதுதான்!
பாடப் புத்தகங்களில் கிமு கிபி நீக்கம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
தமிழக அரசு பாடப்புத்தகங்களில் மாற்றம்
செய்துள்ளது. கிமு கிபி (கிறிஸ்து பிறப்பதற்கு
முன், பின்) என்ற தொடர்கள் பாடப் புத்தகங்களில்
இருந்து நீக்கப் பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக
பொது ஆண்டுக்கு முன், பின் என்ற தொடர்கள்
பயன்படுத்தப் பட்டுள்ளன.

உலகெங்கும் கிமு கிபி என்ற பதங்கள் நீக்கப்பட்டு,
CE, BCE என்ற பதங்கள் அறிமுகமாகி செயல்பாட்டுக்கு
வந்து விட்டன.

CE = COMMON ERA  (பொது சகாப்தம்)
BCE = BEFORE COMMON ERA (பொது சகாப்தத்துக்கு முன்)

பழைய BC (Before Christ)
AD (Anna Domini)
ஆகிய பதங்கள் நீக்கப்பட்டு
BCக்கு பதில் BCE
ADக்கு பதில் CE
என்பதாக மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஏறத்தாழ
உலகம் முழுவதும் 1985ஆம் ஆண்டிலேயே
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன.
தமிழகத்தில் இது 2018ல், 33 ஆண்டுகள் கழித்து
நடைமுறைக்கு வருகிறது.

மாற்றியதன் காரணம் என்ன?
----------------------------------------------------
கிமு கிபி ஆகிய பதங்கள் கிறிஸ்துவ மதச் சார்பு
உடையதாக இருப்பதால், இதை மாற்றி,
மத்சசார்பற்ற காலண்டரைக் கொண்டு வர வேண்டும்
என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்தக் கோரிக்கையை யூதர்கள், இஸ்லாமியர்கள்,
பிராட்டஸ்டண்டுகள் ஆகியோர் எழுப்பினர்.

இக்கோரிக்கையை ஏற்று, மதச்சார்பற்ற
காலண்டரை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கினார்.
இதன் விளைவாக கிமு, கிபி ஆகிய பதங்கள்
நீக்கப் பட்டன. கிறிஸ்து சகாப்தம் (Christian Era)
என்ற பெயர் மாற்றப்பட்டு, பொது சகாப்தம்
(Common Era) என்ற பெயர் அறிமுகமானது.

இந்த மாற்றத்துக்காகத் தொடர்ந்து பல
ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வந்தது
நியூட்டன் அறிவியல் மன்றம். இன்று அந்த
மாற்றம் கைகூடி உள்ளது.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்த
சாதனையை நிகழ்த்தியது என்று யாம்
உரிமை கோரவில்லை. ஆனால் பொதுவெளியில்
யாரினும் கூடுதலாக, பொது சகாப்தம் என்ற
கருத்தாக்கத்தை மக்களுக்கு அறிமுகம்
செய்ததும், அதற்கு மாற வேண்டும் என்று
மக்களை வலியுறுத்தியதும் நியூட்டன் அறிவியல்
மன்றமே.

பொது சகாப்தம் குறித்து மேலும் அறிய
விரும்புவோர் அறிவியல் ஒளி பதினோராம்
ஆண்டுச் சிறப்பு மலரில் (பிப்ரவரி 2018)
நாள்காட்டியின் கதை என்ற தலைப்பில்
நான் எழுதிய கட்டுரையைப் படிக்கலாம்.

சமூக மாற்றம், சமூக மாற்றம் என்கிறார்களே
அது இதுதான்! நியூட்டன் அறிவியல் மன்றம்
சமூகத்தை மாற்றி அமைத்துள்ளதா, இல்லையா?
********************************************************


பொது சகாப்தம் குறித்து நான் ஏற்கனவே முகநூலில்
நிறையாக கட்டுரைகளை இந்த ஆண்டின்
தொடக்கத்தில் எழுதி உள்ளேன். வாசகர்கள்
அவற்றைப் படிக்கலாம்.
    

இதுவும் சமூக மாற்றம்தான். ஒட்டு மொத்தமான
முழுமையான சமூக மாற்றம் அல்ல; அப்படி
ஒரு மாற்றத்தை ஒரேயடியாக எவரும் நிகழ்த்தி
விட முடியாது. சமூகத்தின் சிந்தனையில்
செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் சமூக
மாற்றமே என்கிறது மார்க்சியம்.

காமம் எற
COMMON ERA என்ற தொடருக்கு பொது சகாப்தம்
என்பதே மொழிபெயர்ப்பு. வேறு சிறந்த
தமிழாக்கம் கிடைக்கிற வரையில் சகாப்தம்
என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
CHRISTIAN ERA என்ற தொடர் கிறிஸ்து சகாப்தம்
என்றுதான்  மொழிபெயர்க்கப் படுகிறது.
அதை கிறிஸ்து ஆண்டு என்று எவரும்
குறிப்பிடுவதில்லை.

எனவே பாடப்புத்தகங்களை எழுதியவர்கள்
பொது சகாப்தம் என்று குறிப்பிட்டு இருக்க
வேண்டும். அதற்குப் பதிலாக பொது ஆண்டு
என்று எழுதுவது சரியல்ல.
Common year அல்ல common era.
செம்மொழியான தமிழில் era என்ற சொல்லுக்கு
நிகரான தமிழ்ச்சொல் இல்லை. ஆண்டு என்பது
era நிகர் ஆகாது  


கிறிஸ்து சகாப்தம் என்பது பொது சாகாப்தம்
என்று மாற்றப் பட்டு உள்ளது. ஆண்டு கணக்கிடும்
முறையில் மாற்றம் இல்லை.
    

கிறிஸ்து என்ற பெயர் ஆட்சேபிக்கப் பட்டது.
எனவே அப்பெயர் நீக்கப்பட்டு பொது சகாப்தம்
என்ற பெயர் சூட்டப் .பட்டுள்ளது.


சொல்லுங்கள், தவறில்லை.

பெயர் மாற்றமும் சமூக மாற்றமே. சமூக மாற்றம்
என்பதற்கான வரையறைக்கு உட்படும்
எந்த ஒரு மாற்றமும், அது எவ்வளவு சிறியதாக
இருந்தாலும் சமூக மாற்றமே.


பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்து திரிந்து
கொண்டிருக்கும் மார்க்சிய வேடம் தரித்த
குட்டி முதலாளித்துவ ஆசாமிகளிடம்
உங்கள் பதிலைச் சொல்லுங்கள். ஏதாவது
கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டும்.

 தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற
வேண்டுமென சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம்
இருந்து .செத்தார். நடந்ததா பெயர் மாற்றம்?
இல்லையே. அந்தப் பெயரை மாற்றுவதற்கு
ஏற்ற சமூக மாற்றம் நிகழ்ந்த பின்னரே
தமிழ்நாடு என்று பெயர் மாறியது. இன்னும் அநேக
உதாரணங்கள் உள்ளன.


ஒரு சினிமாவுக்கு அந்த டைரக்டர்  விரும்பிய
பெயர் வைக்க முடியுமா? சண்டியரா விருமாண்டியா?
இன்னும் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக