சனி, 23 ஜூன், 2018

மதம் பற்றிய ஞானியின் பார்வை! புரூனோ பவ்வர் பற்றி!
இது ஒரு மரபு மீறல் பார்வை!
------------------------------------------------------------
நல்லதும் கெட்டதும் கலந்ததே மதம்.
முற்போக்கான பாத்திரத்தையும் மதம் ஆற்றி
இருக்கிறது.  பிற்போக்கான பாத்திரத்தையும்
மதம் ஆற்றி இருக்கிறது.
மதம் ஆதிக்கம் செய்கிறது. அதே நேரத்தில்
ஆறுதலும் தருகிறது.

எனவே மதத்தை 100 சதம் எதிர்க்க வேண்டிய
தேவை இல்லை. மதத்தின் ஆதிக்கம் சார்ந்த,
அதிகாரம் சார்ந்த கூறுகளை மட்டுமே எதிர்க்க
வேண்டும். இதுதான் ஞானியின் கருத்து.
இது மரபான மார்க்சியப் பார்வைக்கு எதிரானது.
இது சரியா? தவறா? வாசகர்கள் கருத்துக் கூறலாம்.   


புரூனோ பவ்வர் (Bruno Bauer) பற்றி எங்கல்ஸ்!
------------------------------------------------------------------------------
கிறிஸ்துவ மதம் குறித்த எங்கல்சின் கருத்துக்களை
அறிய விரும்புவோர் புரூனோ பவ்வர் குறித்து
எங்கல்ஸ் எழுதி உள்ளதைப் படிக்கலாம்.
(Bruno Bauer and early christianity). இது மார்க்ஸ் எங்கல்ஸ்
இருவரும் 1882ல் எழுதியது. அதாவது தமது 62ஆம்
வயதில் எங்கல்ஸ் எழுதியது. தமது மரணத்துக்கு
ஓராண்டுக்கு முன் மார்க்ஸ் எழுதியது. (பார்க்க:
On religion by  Marx, Engels. 

யார் இந்த புரூனோ பவ்வர்? இவர் ஒரு பேராசிரியர்.
எந்த ஊர்ப் பேராசிரியர்? வேறு எந்த ஊர்?
ஜெர்மனிதான்! பேராசிரியர் ஹெர் டூரிங்
எந்த ஊர்? ஜெர்மனிதான்! பேராசிரியர் லுத்விக்
பாயர்பாக் எந்த ஊர்? ஜெர்மனிதான்! பேராசிரியர்
ஹெக்கல் எந்த ஊர்? ஜெர்மனிதான்! காரல் மார்க்சும்
பிரெடரிக் எங்கல்சும் எந்த ஊர்? ஜெர்மனிதான்!
ஜெர்மனி மார்க்சியத்தின் தாயகம்!
============================

ஒன்று மற்றொன்றை அழிப்பதா? அல்லது
இரண்டுமே சகவாழ்வு (coexistence) வாழ்வதா?
--------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்
mutually exclusive ஆக, அதாவது ஒன்றையொன்று
விலக்கிக் கொள்வதாக இருக்க வேண்டிய
அவசியமே இல்லை. இதுதான் நாகராஜன், ஞானி
இருவரின் கருத்தும். இது விவாதத்துக்கு உரியது.
(debatable).

இவை இரண்டும், அதாவது  பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் சர்வ நிச்சயமாக mutually
exclusive என்று பார்ப்பது மரபான மார்க்சியப்
பார்வை. இதற்கு மாறாக, அவ்விரண்டையும்
ஒரு ஒருங்கிணைந்த இரட்டையாக (integrated binary)
பார்க்கின்றனர் நாகராஜனும் ஞானியும்.

ஆக, கருத்து முதல்வாதமும் பொருள்முதல்வாதமும்
mutually exclusiveஆ அல்லது integrated binaryயா? இது
விவாதத்துக்கு உரியது. ஒட்டியும் வெட்டியும்
காத்திரமான கருத்துக்கள்,தர்க்கங்கள் கொண்டுள்ள
தோழர்கள் அவற்றை முன்வைக்கலாம்.

பின்குறிப்பு:
---------------------
mutually exclusive அல்லது பரஸ்பரம் விலக்கிக்
கொள்ளுதல் என்றால் என்ன?
பூவா தலையா போட்டுப் பார்க்க ஒரு நாணயத்தைச்
சுண்டுகிறோம். தலை விழுந்தால் பூ விழாது.
பூ விழுந்தால் தலை விழாது; விழ முடியாது.
இவ்விரு நிகழ்வுகளும் (பூ விழுதல் அல்லது
தலை விழுதல்) mutually exclusive ஆகும். அதாவது
ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழ முடியாது
என்ற நிலையில் உள்ள நிகழ்வுகள் mutually exclusive
என்று அழைக்கப்படும். அதாவது பரஸ்பரம்
விலக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் ஆகும்.

பொருள்முதல்வாதம் இருந்தால் கருத்துமுதல்வாதம்
இருக்கக் கூடாது; அது போல கருத்துமுதல்வாதம்
இருந்தால் பொருள்முதல்வாதம் இருக்கக் கூடாது
என்கிற நிலைபாடு mutually exclusive ஆகும்.
ஒரே நேரத்தில் இரண்டையும் சேர்த்து வைத்துக்
கொள்வது ஒருங்கிணைந்த இரட்டை (integrated binary)
ஆகும். 
=====================================
நிரூபிக்க வேண்டும்! நிரூபிக்காமல் பேசுவது
அறிவியல் ஆகாது!
============================================
1) அத்வைத மார்க்சியம் என்ற ஒன்று கிடையாது.
இல்லாத ஒன்றை இருப்பது போலச்  சொல்வது
அத்வைத ஆதரவு நிலையாகும். இது மார்க்சியத்துக்கு
கெடுதி விளைவிக்கும்.

2) வைணவ மார்க்சியம் என்ற ஒன்று கிடையாது.
அப்படி ஒன்று இருப்பதாக எஸ் என் நாகராஜன்
உட்பட யாருமே கூறவில்லை. எனவே வைணவ
மார்க்சியம் என்ற பதத்தைப் பிரயோகிப்பதே
மார்க்சியத்துக்கு எதிரான மனநிலையை
வெளிப்படுத்தும்.

3) பெரியாரியம் அம்பேத்காரியம் போன்ற குட்டி
முதலாளித்துவப் போக்குகளை மார்க்சியத்துடன்
கலக்க வேண்டும் என்பதை எதிர்த்து ஆயிரம்
முறை எழுதி இருக்கிறேன். பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துக்கு முழுக்க ஆதரவு கொடுத்த
பெரியார் அம்பேத்கார் ஆகியோர் மார்க்சியத்துக்கு
எதிரானவர்கள் என்பதை ஆதாரத்துடன் பலமுறை
எழுதி இருக்கிறேன்.

4) மார்க்சியம் என்பது எவருடைய தனிச்சொத்தும்
அல்ல. மார்க்சியம் என்பது அகல்விரிவானதும்
ஆழமானதுமான ஒரு தரிசனம். தத்துவார்த்த
மொழியில் மார்க்சியம் ஒரு தரிசனம் என்றே
தத்துவ அறிஞர்களால் அழைக்கப் படுகிறது.
மார்க்சியத்தை விட்டு வெளியேறாமல், ஆனால்
மார்க்சிய நிலைகளில் மாறுபாடு கொள்வோரை
எப்படி அழைப்பது? மார்க்சிஸ்டுகள் அல்லர்
என்று கூற இயலாது.

5) எனவே ஒரு கருத்து அல்லது கோட்பாடு
மார்க்சியமற்றது (unmarxist)  என்றால்  அது
மார்க்சியமற்றது என்று நிரூபிக்கப் பட்டு
இருக்க வேண்டும்.

6) ஞானி, நாகராஜன் ஆகிய இருவரும் பகிரங்கமாக
தங்களின் கருத்துக்களை நூல்கள் மூலம்
வெளிக் கொண்டு வந்துள்ளனர். அதற்கு நூல்கள்
மூலமே மறுப்புக் கொடுக்க வேண்டும். அப்படி
அவர்களை மறுத்து மார்க்சிய நோக்கில் இருந்து
நூல்கள் எழுதப் பட்டு உள்ளனவா?  நான் அறிந்த
வரையில் இல்லை.

7) ஒரு கருத்தை மறுத்து அது தவறு என்று நிரூபிக்க
இயலாத கோழை வசைகளில் .இறங்குவான்.
தர்ம அடி போடுவான். நாகராஜன், ஞானி விஷயத்தில்
இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

8) நிற்க. இதுவரை நான் எழுதிய இரண்டு
கட்டுரைகளும் என்ன சொல்கின்றன? ஞானி, 
நாகராஜன் இருவரும் என்ன சொல்கிறார்கள்
என்பதை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்கின்றன.
அவர்கள் தரப்பு வாதம் மட்டுமே சொல்லப்
பட்டு உள்ளது.

9) அவர்கள் கருத்து மீதான எனது மறுப்பு  அடுத்த
கட்டுரையில் வெளிவரும் என்று தெளிவாக
எழுதி இருக்கிறேனே, அதைப் படிக்கவில்லையா?

10) அறிவியல் பூர்வமான தத்துவார்த்த விவாதம்
என்பதை இப்படித்தான் நடத்த முடியும். எதிரி
என்ன சொல்கிறான் என்பதை, அவன் தரப்பை,
அவனுடைய தர்க்கத்தை முழுவதுமாகச்
சொல்லிய பிறகே, அதன் மீதான மறுப்பைச்
சொல்ல முடியும்.   

11) குட்டி முதலாளித்துவம் அதுவரை பொறுத்து
இருக்காது. காரணம் தங்கள் வாழ்க்கையில்
காத்திரமான அறிவியல் பூர்வமான விவாதம்
எப்படி இருக்கும் என்றே அதற்குத் தெரியாது.

12) அருள் கூர்ந்து அடுத்த கட்டுரை வெளியாகும்
வரை காத்து இருக்கவும். ஞானியும் நாகராஜனும்
மார்க்சியர்கள் அல்லர் என்றால் அதை நிரூபித்து
ஏதேனும் புத்தகம் வந்துள்ளதா? வந்திருந்தால்
அதை எனக்குத் தெரியப் படுத்தவும்.  


கருத்து எங்கே? வசவுகள் கருத்து ஆகாது!
--------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்
mutually exclusive என்கிறது மார்க்சியம். இல்லை,
அவை இரண்டும் integrated binaries என்கின்றனர்
நாகராஜனும் ஞானியும். நாகராஜன் சொன்னதை
மறுத்து வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்
படுகின்றன. 

ஞானியை மறுப்பது என்றால், அவருடைய
integrated binaries கோட்பாட்டை மறுக்க வேண்டும்.
யாரும் இதுவரை மறுக்கவில்லையே!
வாசகர்களுக்கு இது புரிய வேண்டும் என்பதற்காக
முந்திய கமன்ட்களில் எழுதி இருக்கிறேன்.
படித்துப் பார்த்து விட்டு, அதன் பிறகாவது
மறுக்கவும்.

என்னென்ன தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்
என்று மூத்த பேராசிரியர் அவர்கள் ஒரு
வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளார்.

அதன்படியே,
ஞானி நாகராஜன் ஆகியோரின் கருத்துக்களில்
ஐந்து அம்சங்களை எனது கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன். அந்த ஐந்து அம்சங்கள்
மீதும் விவாதிக்க வருமாறு வாசகர்களுக்கு
வேண்டுகோளும் விடுத்துள்ளேன்.

கட்டுரை எழுதி பல மணி நேரம் ஆகியும்
எந்த விவாதமும் வரவில்லை. தயவு செய்து
அந்த ஐந்து அம்சங்களையும் படித்துப் பார்த்து
அதன் மீது விவாதத்தை முன்னெடுக்குமாறு
கோருகிறேன். 

(பாஸ்கர் விஸ்வநாதன் முத்து அவர்களுக்கு) 
மூன்றாவது கட்டுரையில் மட்டுமே
மறுப்பு எழுதப்படும்!
------------------------------------------------------------------
தங்களின் பின்னூட்டம் முற்றிலும் பிறழ் புரிதல்
ஆகும்.
1) இதுவரை நான் எழுதிய இரண்டு
கட்டுரைகளும் என்ன சொல்கின்றன? ஞானி, 
நாகராஜன் இருவரும் என்ன சொல்கிறார்கள்
என்பதை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்கின்றன.
அவர்கள் தரப்பு வாதம் மட்டுமே சொல்லப்
பட்டு உள்ளது.

2) அவர்கள் கருத்து மீதான எனது மறுப்பு  அடுத்த
கட்டுரையில் வெளிவரும் என்று தெளிவாக
எழுதி இருக்கிறேனே, அதைப் படிக்கவில்லையா?

3) அறிவியல் பூர்வமான தத்துவார்த்த விவாதம்
என்பதை இப்படித்தான் நடத்த முடியும். எதிரி
என்ன சொல்கிறான் என்பதை, அவன் தரப்பை,
அவனுடைய தர்க்கத்தை, தனக்குச் சார்பாக
அவன் எடுக்கும் மார்க்சிய மேற்கோள்களை
இவை அனைத்தையும் முழுவதுமாகச்
சொல்லிய பிறகே, அதன் மீதான மறுப்பைச்
சொல்ல முடியும். இதுவே அறிவியல் அணுகுமுறை.  

4) இன்னும் நான் மறுப்பே எழுதவில்லையே!
அதற்குள் கூச்சலிட்டால் எப்படி?

5) ஜெயமோகனும் நானும் ஒரே துறையில்
ஒரே தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர்கள்.
எங்களது இடதுசாரித் தொழிற்சங்கம். அங்குதான்
சக தொழிலாளியை தோழர் என்று அழைக்க
முடியும். எங்கள் துறையில் உள்ள INTUC சங்கத்தில்
தோழர் என்று அழைக்க அனுமதி இல்லை.
அங்கு சகதொழிலாளியை திருவாளர் என்றும்
சர்வஸ்ரீ என்றும்தான் குறிப்பிட்டு கூட்ட
அழைப்பிதழ் முதல் ஆண்டறிக்கை வரை
அச்சடிப்பார்கள். 

      
மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ ஆகிய
மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரால் போதிக்கப்பட்ட
மார்க்சியமே மார்க்சியம் ஆகும். ஆனால் இன்றோ
கீழை மார்க்சியம், மேலை மார்க்சியம், மண்ணுக்கேற்ற
மார்க்சியம் என்று பல்வேறு வகையான மார்க்சியம்
பொதுவெளியில் உள்ளது. இவற்றில் இருந்து
வேறுபடுத்திக் காட்டவே, மரபான மார்க்சியம்
என்ற சொல்லை ஆள்கிறேன். மரபான மார்க்சியம்
என்றால் மூல மார்க்சியம் என்ற பொருளில் ஆள்கிறேன்.

எஸ் என் நாகராஜன் 2009ல் கீழை மார்க்சியம்
பற்றி Eastern Marxism: Essays என்று ஒரு நூலை
ஆங்கிலத்தில் எழுதினார். இந்த நூலுக்கு
ஆங்கில இந்து பத்திரிகையில் (The Hindu) ஒரு
விமர்சனம் மே 2009ல் வெளிவந்தது. விமர்சனத்தை
(ஆங்கிலத்தில்) எழுதியவர் பிரபல இடதுசாரி
ஈழ எழுத்தாளர் செ கணேசலிங்கன். அதில் இருந்து
ஒரு பகுதியை இங்கே தருகிறேன். நாகராஜன்
கூறுவது பற்றி அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற
மறுப்பை வாசகர்கள் தெரிவிக்கலாம். 


 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக