ஞாயிறு, 3 ஜூன், 2018

வைகுண்டராஜனின் கொள்கை!
--------------------------------------------------------
தூத்துக்குடியை மாசு படுத்துவது
எனக்கு மட்டுமேயான ஏகபோக உரிமை.
ஸ்டெர்லைட்டும் சேர்ந்து மாசு படுத்தினால்
நாளைக்கு எங்களால் மாசு படுத்த முடியாமல்
போய்விடும். மக்கள்  விழித்துக் கொள்வார்கள்.
இதுதான் வைகுண்டராஜனின் கொள்கை!
------------------------------------------------------------------------
வைகுண்டராஜன் = வி வி மினரல்ஸ் குழும அதிபர்.

எனவே எல்லாப் பழியையும் தூக்கி
ஸ்டெர்லைட் மீது போடுவோம்!

இதற்கு பங்குத் தந்தைகள் ஒத்துழைப்பார்கள்.
விலைபோன பாத்திமா பாபுக்கள்
ஒத்துழைப்பார்கள்.போலி முற்போக்குகளை,
போலி சுற்றுச் சூழல் கயவர்களைத் திரட்டி விடலாம்.
--------------------------------------------------------------------------
இருபெருங் கயவர்கள்!
யார் கூடுதல் கயவர்?
---------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
கயவன்-1: அனில் அகர்வால் ( ஸ்டெர்லைட் அதிபர்)
லண்டன்வாழ் இந்தியக் கயவர். குஜராத்தைச் சேர்ந்த
மார்வாடி.

கயவன்-2: வைகுண்டராஜன். பச்சைத் தமிழர்.
தென் மாவட்டங்களின் (நெல்லை குமரி தூத்துக்குடி)
முடிசூடா மன்னர். அவனன்றி ஓர் அணுவும் அசையாது
என்பது கடவுளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ
வைகுண்டராஜனுக்குப் பொருந்தும்.

ஆள், படை, அம்பு, சேனை, அடியாட்கள், சாதி வெறிக்
கூட்டம் என்று பெரும் ரவுடி சாம்ராஜ்யம் இவருடையது.
எந்த அரசியல் கட்சியும் இவரை ..எதிர்க்காது.
இவரை எதிர்ப்பது பற்றி கனவிலும் நினைக்க
மாட்டார் வைகோ.

சகல விதமான போலி முற்போக்குகள், போலி
இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள் என்று
ஒருவர் கூட இவரை எதிர்த்த வரலாறு கிடையாது.

இவரை எதிர்ப்பவனுக்கு உயிர் உத்தரவாதம்
கிடையாது.

தூத்துக்குடியின் மாசுக்கு அனில் அகர்வால் காரணமா?
வைகுண்டராஜன் காரணமா?
ஒவ்வொருவரும் எந்த அளவு காரணம்?

அனில் அகர்வால் எவ்வளவு காரணமோ அதைவிட
ஆயிரம் மடங்கு காரணம் வைகுண்டராஜன்.

அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட்டை விட,
வைகுண்டராஜனின் வி வி டைட்டானிக் பிக்மென்ட்ஸ்
நிறுவனம் தூத்துக்குடியை அதிகமாக மாசு
படுத்துகிறது.

நாங்கள் இந்த உண்மையைத் துணிந்து கூறுகிறோம்.
கோழைப்பயல்களால் இந்த உண்மையைக் கூற
முடியாது.
-------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட் தெரியும். கில்பர்ன் தெரியுமா?
தெரியாது. கில்பர்ன் Kilburn Chemicals ரசாயன
ஆலைதான் தூத்துக்குடியை ஸ்டெர்லைட்டை விட
அதிகமாக மாசு படுத்துகிறது.

Kilburn Chemicals என்பது வைகுண்டராஜனின் நிறுவனம்.

ஸ்டெர்லைட் மீது உயர்நீதிமன்றத்தில்
வழக்குப் போட்டாரே வைகோ!  வைகுண்ட
ராஜனின் Kilburn Chemicals மீது ஏன்
வழக்குப்  போடவில்லை? ஒருநாளும் போடமாட்டார்!

Kilburn Chemicals மாசு படுத்துகிறது என்ற நீரி ( NEERI)
அமைப்பின் அறிக்கையை தொடர்ந்து வேறு
பெயரில் நிறுவனத்தை நடத்தினார்
வைகுண்டராஜன். இது தெரியுமா?
அந்த வேறு பெயர் என்ன என்று தெரியுமா?

வி  வி மினரல்ஸ் என்பது ஒட்டு மொத்தக்க
குழுமத்தின் பெயர். கில்பர்ன் கம்பனியை
டைட்டானிக் பிக்மென்ட்ஸ் கம்பனி என்று
பெயர் மாற்றி அதே PRODUCTஐ உற்பத்தி
செய்து ஊரையே மாசு படுத்துகிறார்.

தூத்துக்குடி மக்களுக்கு புற்றுநோய் வர
முக்கிய காரணம்
வைகுண்ட ராஜனின் டைட்டானிக் பிக்மென்ட்
கம்பனியின்  இலுமினைட் தாது processingதான்.

ஜெயாவின் கூட்டாளியும் பங்குதாரருமான
வைகுண்டராஜனை கலைஞர் முதலில்
கைது செய்து பின் மறுநாளே
பின்வாங்கினார்.வைகுண்டரின் power அப்படி!
*******************************************************





       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக