திங்கள், 10 அக்டோபர், 2016

விஜயதசமியும் அண்ணல் அம்பேத்காரும்!
விஜயதசமி என்னும் சுபயோக சுபதினம்!
------------------------------------------------------------------------------
1956ஆம் ஆண்டு அக்டோபர்  14ஆம் நாள் விஜயதசமித்
திருநாள் ஆகும். இந்தியாவில் இந்த நாள் வரலாற்றுச்
சிறப்பு மிக்க நன்னாள் ஆகும். இந்த சுபயோக சுபதினத்தில்,
விஜயதசமித் திருநாளில், அண்ணல் அம்பேத்கார்
புத்த மதத்தில் சேர்ந்தார். நாக்பூரில் லட்சக் கணக்கான
மக்களுடன் அம்பேத்கார் பௌத்தத்தில் இணைந்தார்.

மதம் மாறுவதற்கு அம்பேத்கார் தேர்ந்தெடுத்த நாள்
விஜயதசமித் திருநாள் ஆகும். இது வெற்றியைக் குறிக்கும்
நாள் ஆகும். அண்ணல் அம்பேத்காரின் பௌத்த
மதமாற்றம் ஒரு வெற்றியே என்பதை உணர்த்த
விஜயதசமித் திருநாள் தேர்ந்து எடுக்கப் பட்டது.
சமஸ்கிருதத்தில் விஜயம் என்றால் வெற்றி என்று பொருள்.

அம்பேத்கார் மறைந்த பின்னும்,  பௌத்தத்தைப்
பின்பற்றும் அம்பேத்காரின் சீடர்கள் நாக்பூரில்
விஜயதசமியன்று கூடி, அம்பேத்கார் பௌத்தத்திற்கு
மதம் மாறிய இந்த நிகழ்வை மிகவும் விமரிசையாகக்
கொண்டாடி வருகிறார்கள். தமிழ் நாட்டில் இருந்தும்
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும்
அம்பேத்காரின் சீடர்கள் விஜயதசமியன்று நாக்பூரில்
கூடி விழா எடுக்கிறார்கள்.  

விஜயதசமிக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும்
இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை
இந்தக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன.
********************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக