செவ்வாய், 11 அக்டோபர், 2016

குட்டிமுதலாளித்துவப் பிறழ் புரிதல்!
-----------------------------------------------------------------
காந்தியை இக்கட்டுரைத் தொடர் மதிப்பிடவே இல்லை.
ஏன் இந்தப் பிறழ் புரிதல்? காந்தியை விமர்சிக்கும்
ரங்கநாயகம்மா, தமது நூலில் காந்தியின் எழுத்துக்களில்
இருந்து ஒரு வரி கூட மேற்கோள் காட்டவில்லை. காந்தியப்
பொருளாதாரம் பற்றி விமர்சிக்கும் அவர், காந்தியப்  பொருளாதாரத்தை விவரிக்கும் டாக்டர் ஜெ சி
குமரப்பாவின் நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி இருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. அது விமர்சன
முறைமையே அல்ல. அடுத்து ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு
முன்னுரிமை கொடுத்த காந்தியை, ஏகாதிபத்திய எதிர்ப்பை
தனது நிகழ்ச்சி நிரலில் கொண்டிராத அம்பேத்காரின்
எழுத்து வாயிலாக விமர்சிப்பது சரியல்ல என்பதையே
கட்டுரைத் தொடர் சுட்டிக் காட்டுகிறது.
**
 அடுத்து காந்தி, சாதியப் பிரச்சினைக்குத் தாம் தீர்வு
கண்டு விட்டதாக ஒருபோதும் உரிமை கோரியவர் அல்ல.
அப்படியிருக்க, சாதியம் பற்றிய ஒரு நூலில் காந்திக்கு
இடம் வழங்கவே தேவையில்லை. அப்படி காந்தியை
விமர்சிக்க நேரும்போது, காந்தியின் எழுத்துக்களில்
இருந்து அவரை விமர்சிக்காமல், காந்தியோடு
எப்போதும் முரண்பட்ட ஒருவரின் எழுத்து வாயிலாக
காந்தியை விமர்சிப்பது சரியல்ல என்பதையே
இக்கட்டுரைத் தொடர் சுட்டிக் காட்டுகிறது.
**
இதை காந்திக்கு ஆதரவான  மதிப்பீடு என்று முடிவு
செய்வதெல்லாம் குட்டி முதலாளித்துவப் பிறழ்
புரிதல் ஆகும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக