சனி, 8 அக்டோபர், 2016

(1) கூடங்குளம் அணுஉலை குறித்த மார்க்சிய நிலைபாடு!
உலகின் முதல் அணுஉலையை நிர்மாணித்த ஸ்டாலின்!
மாவோ காலத்தில் சீனா தயாரித்த அணுகுண்டு!
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் சிந்தனைக்கு!
--------------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரில் (மார்க்ஸ்,எங்கல்ஸ்,
லெனின், ஸ்டாலின், மாவோ) மார்க்ஸ் காலத்தில்
மின்சாரம் கிடையாது. மார்க்சின் மூலதனம் நூல் முதல்
அவரின் அத்தனை படைப்புகளும் பகலில் சூரிய
வெளிச்சத்திலும், இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும்
எழுதப் பட்டவைதான்.

மார்க்ஸ் 1883இல் மறைந்தார். அதன் பிறகு 12 ஆண்டுகள்
வாழ்ந்த எங்கல்ஸ் 1895இல் மறைந்தார். லண்டனில்
விக்டோரியா மகாராணியின் அரண்மனையில் கூட
எண்ணெய் விளக்குகளும் மெழுவர்த்திகளுமே ஒளி
தந்தன.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில்தான்
மின்சாரம் மூலமாக வெளிச்சம் பெறுதல் நடைமுறைக்கு
வந்தது. ஆக, மார்க்ஸ்-எங்கல்ஸ் காலத்தில் மின்சாரம்
இல்லை. 1892இல்தான், உலகிலேயே முதன் முதலாக
அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரின் ஒரு பகுதியில்
தாமஸ் ஆல்வா எடிசன்  மின்விளக்குகளால் ஒளி
வழங்கினார்.

ஆக மின்சாரம் போன நூற்றாண்டில்தான் பிறந்தது.
அணுமின்சாரத்தை எடுத்துக் கொண்டால். அதன் வயது
நம்மில் பலரின் வயதை விடக் குறைவு. 1951இல் தான்
முதன் முதலாக, சோதனை முறையில், அணுமின்சாரம்
தயாரிக்கப் பட்டது. இது மிகவும் குறைவான அளவில்,
100 கிலோவாட் அளவை விடக் குறைவாகவே தயாரிக்கப்
பட்டது.

உலகின் முதல் அணுஉலை!
--------------------------------------------------------
உலகின் முதல் அணுஉலை சோவியத் ஒன்றியத்தில்
ஸ்டாலின் காலத்தில் கட்டப் பட்டது. மாஸ்கோவில்
இருந்து, சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள ஓப்னின்ஸ்க்
என்ற அறிவியல் நகரத்தில் இந்த அணு உலையின்
கட்டுமானம்  1951 புத்தாண்டின் முதல் நாளன்று
(1951, ஜனவரி 1) தொடங்கியது. 6 மெகாவாட் வணிக
ரீதியான மின்சாரத்தை இந்த அணுஉலை உற்பத்தி செய்து,
மத்தியத் தொகுப்பிற்கு (கிரிட்) அனுப்பியது.     

ஸ்டாலினின் புரட்சிகரத் தலைமையின் கீழ், சோவியத்
ஒன்றியம் 1949 ஆகஸ்டு 29இல் அணுகுண்டைத்
தயாரித்தது. இதே போல், மாவோவின் புரட்சிகரத்
தலைமையின் கீழ், சீனா  தனது முதல் அணுகுண்டை,
1964 அக்டோபர் 16இல் தயாரித்தது. சீனாவிலும்
ரஷ்யாவிலும் கணக்கற்ற அணுஉலைகள்
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய
அணுஉலைகள் கட்டப்பட்டும் வருகின்றன.

பெருந் தொழில்களால் ஆன மையப் படுத்தப்பட்ட 
பொருளாதாரத்தைத் தவிர்த்த மாவோ கூட, சீனாவில் 
அணுகுண்டு தயாரித்தார். மாவோ மறைந்தது 1976இல்.
அதற்கு வெகுகாலம் முன்னதாகவே, அதாவது 12 
ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1964இல் அணுகுண்டு 
தயாரித்தார் மாவோ. அதே போல் ஸ்டாலினும் 1949
ஆகஸ்டில் அணுகுண்டு தயாரித்தார்.
**
மாவோவும் ஸ்டாலினும் தவறு செய்தார்களா?
இன்றும் கூட, சீனாவிலும் ரஷ்யாவிலும் அணுஉலைகள் 
செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனவே.
** 
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் மின்சாரமே இல்லை 
என்பதால், அவர்கள் குறிப்பாக மின்சாரம் பற்றிக் 
கருத்துக் சொல்லவில்லை. ஆனால் லெனின் காலத்தில் 
மின்சாரம் பரவலாகி விட்டது. 
**
"சோவியத் ஆட்சி அதிகாரமும் மின்சாரமும் சேர்ந்தால் 
சோசலிசத்தை அடைய முடியும்" என்று லெனின் சொன்னாரே!
அதை லெனினும் ஸ்டாலினும் செய்து காட்டினார்கள்!
இவ்வளவுக்கும் லெனினுக்கு அணுமின்சாரம் பற்றி 
எதுவும் தெரியாது. 1924ஆம் ஆண்டிலேயே லெனின் 
மறைந்து விட்டார். 1940களில்தான் அணுகுண்டும் 
தொடர்ந்து அணுமின்சாரமும் தயாரிக்கப் பட்டன.
**
எனவே மூல ஆசான்களில் ஸ்டாலின். மாவோ இருவர் 
மட்டுமே அணுகுண்டு பற்றியும் அணுமின்சாரம் 
பற்றியும் அறிந்து இருந்தனர்.
**
அணுசக்தியை ஆக்க பூர்வமான வழியில் 
பயன்படுத்தவே முடியாது என்ற பதில் 
மார்க்சியத்துக்கு எதிரான பதில் ஆகும்.
**
அணுசக்தியை ஆக்க பூர்வமான வழியில் 
மனிதனால் பயன்படுத்த முடியுமா, முடியாதா?
முடியாத என்ற பதில் கடைந்தெடுத்த பிற்போக்குத் 
தனமான பதில் ஆகும். மேலும் அது மானுடத்திற்கே 
எதிரான பதில் ஆகும்; அறிவியலுக்கும் எதிரான 
பதில் ஆகும்.
**
மார்க்சியம் என்பது கனவு அல்ல. அது அறிவியல்.
எனவே அணுஉலை வேண்டாம் என்ற கருத்து 
1) அறிவியலுக்கு எதிரானது 
2) மனித குலத்துக்கு எதிரானது 
3) மார்க்சியத்திற்கு எதிரானது.
4) உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கும்,
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் எதிரானது.

அணுஉலைகள், அணுமின்சாரம் ஆகியவை குறித்த
வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியைப்
பரிசீலிப்போம். இக்கேள்வி அணுசக்தியை ஆக்க
வழியில் பயன்படுத்த மனித குலத்தால் முடியுமா
முடியாதா என்ற கேள்வியின் வேறு வடிவம்தான்.

அணுசக்தியை ஆக்க வழியில் பயன்படுத்த முடியும்
என்பதே இக்கேள்விக்கு மார்க்சியம் வழங்குகிற விடை.

எனவே அணு உலைகள் கூடாது, அணுமின்சாரம்
கூடாது என்பதெல்லாம் மார்க்சியப் பார்வையில்
பிற்போக்கானவை.

அணுஉலைத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதே!
-------------------------------------------------------------------------------------------------
அணுஉலைத் தொழில்நுட்பமானது ஒரு தொழில்நுட்பம் 
என்ற வகையில் பாதுகாப்பாகச் செயல்பட வல்லதே. 
(It is a safety technology). 

அது மனிதனுக்குக் கட்டப்பட்டதே. 
(humanly controllable and well within the manageable dimensions) 
அது மனிதனுக்குக் கட்டுப்படாத தொழில்நுட்பம் என்ற பின்நவீனத்துவத்தின் கூற்று ஏற்கத் தக்கதல்ல. இங்கு கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இதுதான்: இந்தத் தொழில்நுட்பம் கூறுகிற 
பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்க 
வேண்டும். இதை நாம் கண்காணிக்க வேண்டும்.



மார்க்சியக் கட்சிகளைப் பொறுத்த மட்டில், CPI, CPM
மற்றும் போல்ஷ்விக் (CPI ML PW Bolshvik) கட்சிகள்
அணுஉலைகளை ஆதரிக்கின்றன. கூடங்குளம்
அணுஉலையை இக்கட்சிகள் தெளிவாக ஆதரிக்கின்றன.

அதே நேரத்தில், விநோத் மிஸ்ரா குழுவினர்
(CPI ML Liberation), SOC (மகஇக) ஆகிய கட்சிகள்
கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கின்றன.
இக்கட்சிகளின் நிலை மார்க்சிய நிலைபாட்டுக்கு
எதிரானது. எனவே மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து
விலகி, மார்க்சியமற்ற ஒரு நிலையை (unmarxist)
ஏன் இக்கட்சிகள் எடுத்தன என்பதற்கு அக்கட்சிகள்தான்
விளக்கம் அளிக்க வேண்டும்.

போல்ஷ்விக் கட்சி தனது நிலையைத் தெளிவாக
விளக்கி பிரசுரம் வெளியிட்டுள்ளது. VM குழுவினரும்
SOC தோழர்களும் தாங்கள் விரும்பிய நிலையை
எடுக்க உரிமை உடையவர்கள். அதை எவரும்
ஆட்சேபிக்க முடியாது. அதே நேரத்தில் அவர்களின்
நிலைபாடு மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து
எதிர்த்திசையில் விலகியது என்பதைச் சுட்டிக்
காட்டாமல் இருக்க இயலாது.

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மார்க்சியப்
பிரச்சினையில், மற்றவர்கள் (others) அதாவது,
1) தொண்டு நிறுவனங்கள், 2) பின்நவீனத்துவர்கள்,
3) அடையாள அரசியல் கட்சிகள், 4) குட்டி முதலாளித்துவ
மற்றும் தாராளவாத முதலாளித்துவர்கள் மற்றும்
மார்க்சியம் கற்ற மார்க்ஸாலஜிஸ்டுகள் ஆகியோரின்
நிலைப்பாடு என்ன என்பது ஒரு பொருட்டல்ல.

எவர் ஒருவரும் அல்லது எந்த ஒரு கட்சியும்
அணுஉலைகளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ
உரிமை உண்டு என்று மார்க்சியம் அங்கீகரிக்கிறது.
அதே நேரத்தில், மார்க்சியம் மிகத் தெளிவாக
அணுஉலைகளையும் அணுமின்சாரத்தையும்
ஆதரிக்கிறது. இதுதான் மார்க்சியம்; இது மட்டுமே
மார்க்சியம்.
******************************************************************  
தொடரும்
--------------------------------------------------------------------------------------------------------
    
 
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக