திங்கள், 10 அக்டோபர், 2016

விஜயதசமி நாளை வெற்றியின் குறியீடாகக் கருதினார்
அண்ணல் அம்பேத்கார். அந்த நாள் வெற்றிக்கான நாள்
என்ற காலங்காலமாக நீடித்து வரும் மக்களின்
நம்பிக்கைக்கு மதிப்பளித்து அந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்
அண்ணல் அம்பேத்கார்.
**
அசோகச் சக்கரவர்த்தி கலிங்கப்
போரில் வெற்றி அடைந்தார். அந்த வெற்றியையே
இந்த விஜயதசமி என்ற நாளில் உள்ள விஜய
(விஜய= வெற்றி) என்ற சொல் குறிக்கிறது என்பதே
அம்பேத்காரின் கருத்தாகும். அசோகச் சக்கரவர்த்தி
பௌத்தத்திற்கு மதம் மாறினார் என்ற செய்தி
அம்பேத்காரின் உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்றாகும்.

தோழர் பார்த்திபன், தங்களின் விமர்சனத்திற்கு நன்றி.
"யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்ற உண்மையை
எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். அது சரியான கருத்து.

கட்டுரையின் இறுதியில் சுயமுரண் உள்ளது. ஏகாதிபத்தியம்
என்ற இலக்கணம் பொருந்துகிறது என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.
ஏகாதிபத்தியம் என்பது உச்சக்கட்ட வளர்ச்சி. இதுவே லெனின்
கூறியது. உச்சக்கட்டத்தை அடைந்த பிறகு மீண்டும்
முதலாளித்துவம் என்ற பெயர் சூட்டல் எப்படிச்
சரியாகும்? ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து சிறுவனாகி,
பின் இளைஞனாகி முழுவளர்ச்சி பெற்ற பிறகு, அக்குழந்தை
"மனிதன்" என்று பெயர் சூட்டப் படுகிறது. அது மேலும்
வளர்ந்த பிறகு, அதற்கு அதன் குழந்தைப் பருவத்திற்குரிய
பெயரைச் சூட்ட முயலுவது சரியாகுமா?
**
இந்த சகாப்தம் முழுமைக்கும் அதன் பெயர்
ஏகாதிபத்தியம்தான். ஏகாதிபத்தியம் என்ற கட்டத்தைத்
தாண்டியும் அது வளர்ச்சி அடைந்து விட்டது என்பதையும்
குணாம்ச ரீதியாக முற்றிலும் ஒரு புதிய பண்பை
அது பெற்று இருக்கிறது என்பதையும், எனவே இப்புதிய
பண்பையும் உள்ளடக்கிய ஒரு புதிய பெயர்சூட்டல்
அவசியம் என்பதையும் தாங்கள் முதலில் நிரூபிக்க
வேண்டும்.  

திரு ஞாநி சங்கரன்   அறிவியல் புதிர்கள்


உள்ளடக்கம் பற்றி மட்டுமே என் பின்னூட்டம் பேசுகிறது.
இங்கு வடிவம் பற்றிப் பேச எதுவும் இல்லை. தங்களின்
பதிவு ஒரு கவிதையோ அல்லது சிறுகதையோ இல்லை.
அது உங்கள் கருத்தை மிக நேரடியாக
எடுத்து வைக்கிறது. எனவே வடிவப் பிரச்சினை இங்கு
இல்லவே இல்லை. தாங்கள் கூறும் "அமைப்பாக்கப்
பட்ட முதலாளித்துவம்"  என்பது
லெனின் வரையறுத்த "ஏகாதிபத்தியம்" என்ற
கருத்தாக்கத்தில் இருந்து  குணாம்ச ரீதியாக
எப்படி மாறுபட்டுள்ளது என்பதைத் தாங்கள் விளக்க
வேண்டுமல்லவா? அதையே என் பின்னூட்டம் கூறுகிறது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக