புதன், 12 அக்டோபர், 2016

நன்றி சார். உங்கள் பார்வையை வெளியிட மாட்டேன்.
SVR பற்றி உள்ளது உள்ளபடி கூறியுள்ளேன். நன்றி.

நான் முன்பே AMK அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்தான் இது.
அவர் PM இல்லை என்பது. ஆனால் தாங்கள்தான் தலையிட்டு
நல்ல காரியம் செய்துள்ளீர்கள்.

சற்றுப் பொறுங்கள். எழுதுவோம்.


மார்க்சிய மூல ஆசான்கள் ஐவர் (மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின்,
ஸ்டாலின், மாவோ) என்பதை ஆரம்பம் முதலே எஸ்.வி.ஆர்
ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சிக்குள் நுழைந்த அந்த நொடி
முதல்  ஸ்டாலின் எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.   

அப்படியா. கட்சிக்குள் அவர் உள்ளே வந்திருந்தால்
பெருத்த சேதாரம் ஏற்படுத்தி இருப்பார். அவர் எந்த அரங்கில் செயல்பட்டார்? எவ்வளவு காலம் கட்சியில் இருந்தார்?
 அ மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் பின்னர்தான்
விலகினர், இல்லையா? 

கே.பி.சுந்தராம்பாளைக் காதலித்த நீதிபதி!
--------------------------------------------------------------------------------
ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர்
தன வாழ்க்கையின் ரகசியங்களை வெளியே சொல்ல
ஆசைப் படுகிறார். அவர் கே பி சுந்தராம்பாளைக்
காதலித்தாராம். அந்தச் செய்தியை முகநூலில்
போடா வேண்டுமாம். ஆனால் அவருக்கு கை
நடுங்குவதால், முகநூலில் போஸ்ட் பண்ணத் தெரிந்த
ஒரு இளைஞரோ இளம்பெண்ணோ வேண்டுமாம்.
தக்க சன்மானம் உண்டு. தொடர்புக்கு: 884723 767124.

ஜெயமோகன் அப்போது BSNL துறையில் பணியில்
இருந்தார். எனவே ஆவேசம் தவிர்த்தார். அவர் சார்ந்த
NFTE  சங்கம் அவருக்கு ஆதரவாக இருந்தது. ஆனால்,
சங்கத்திற்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை
என்று ஜெயமோகன் கூறி விட்டார்.தற்போது
அவர் பணிஓய்வு (VOLUNTARY RETIREMENT) பெற்று விட்டார்.
வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவே உள்ளார். நிற்க.
ஜெயமோகன் உறுதியாக நிற்கவில்லை என்பதால்,
எஸ்.வி.ஆர் பக்கம் நியாயம் இருந்தது என்று ஆகி விடாது.
**
ஜெயமோகன் சொந்தமாக எதையும் துப்பறிந்து
எழுதவில்லை.SOC தோழர்கள் எழுதியதின் பேரில்
அவரும் அதை ஏற்று எழுதினார். மூலக் கட்டுரையை
எழுதிய மருதையன் மீது வழக்குப் போட எஸ்விஆர்
தயாராகவே இல்லை. மருதையன் மீது வழக்குப்
போட்டிருந்தால், சந்தி சிரித்துப் போயிருக்கும்.      

நன்றி. எழுதுகிறேன்.

அண்ணாச்சி, தாமிரபரணி மக்களை வாழ வைத்த
ஒரு ஆறு. அதில் சாகிறார்கள் என்னும்போது, எனக்கு
நெஞ்சு நெருடுகிறது.


இக்கட்டுரை எஸ்.வி.ஆரை மதிப்பிடுகிறது.
ஜெயமோகனையோ SOCயையோ மதிப்பிடவில்லை.
எனவே கட்டுரையின் மைய நோக்கத்தைத் தவிர்த்த
விவாதங்கள், வாசகர்களை திசை திருப்பி விடும்.
SOC பற்றியும் ஜெயமோகன் பற்றியும் தனிப் பதிவுகள்
எழுதும்போது. அங்கு அவர்களைப்  பற்றிக் கூறலாம்.  


1) எஸ்.வி.ராஜதுரை 2) வ கீதா 3) அ மார்க்ஸ் 4) ரவிக்குமார்
ஆகிய அனைவரும் ஒரே திசையில் பயணம் செய்தவர்களே.
இவர்கள் அனைவரும் மார்க்சியத்திற்கு எதிராக
அடையாள அரசியலைத் தூக்கிப் பிடிப்பவர்களே.
மார்க்சியத்திற்கு எதிராக இவர்கள் எழுதிய நூல்களே
சாட்சி.


தமிழ்ச் செல்வன் (தமுஎகச) அம்பலப் படுகிறார் என்றால்,
முட்டுக்  கொடுக்க எஸ்.வி.ஆர் வந்து விடுவார். எஸ்.வி.ஆர்
அம்பலப் படுகிறார் என்றால் தமிழ்ச் செல்வன் முட்டுக்
கொடுக்க வந்து விடுவார். இருவரும் அம்பலப் படும்போது
தமுஎகசவின் கவிஞர் வந்து விடுவார் ஆவேசமாக.
**
சிங்கள ராஜபக்சேவுக்கு ஆதரவாகவும், இலங்கையில் இனப்படுகொலையே  நடக்கவில்லை என்று கூறியும்
ஒரு செய்தியை மக்களிடம் பரப்ப 2009இல் திருவனந்தபுரத்தில்
ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்ச் செல்வன்
கலந்து கொண்டார். ஈழத் தமிழர்கள் கொதித்துப் போய்
கண்டனம் செய்தனர். இதற்கெல்லாம் அசைக்க முடியாத
ஆதாரம் உள்ளது. 

அடையாள அரசியலை வலியுறுத்தும் நூல்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக