புதன், 5 அக்டோபர், 2016

அம்பேத்கார் உழைத்துச் சாப்பிட்ட குடும்பத்தில்
பிறந்தவர். அடுத்தவன் உழைப்பில் உண்ட குடும்பம் அல்ல
அம்பேத்கார் குடும்பம். மற்றவர்களை சுரண்டி வாழ்ந்த
குடும்பம் அல்ல அம்பேத்கார் குடும்பம்.
அம்பேத்காரின் குடும்பம் உழைப்பாளி வர்க்கத்துக்
குடும்பம் என்பது உண்மை. அந்த உண்மையைச் சொல்வதில் என்ன தவறு? அம்பேத்கார் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவரா இல்லையா?
**
நூலின் சாரம் என்ன? அது சொல்ல வருகிற கருத்து
என்ன என்பதை பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையாக
எடுத்து, மைக்ராஸ்க்கோப்பில் வைத்துப் பார்க்க வேண்டாம்.

சாதி ஒழிப்பு என்பது நீண்ட காலம் பிடிக்கக் கூடியது/
2000 வருடங்களாக நீடிக்கும் சாதிக்கு இன்ஸ்டன்ட் தீர்வு
எதுவும் கிடையாது. எனவே மார்க்சியம் பிரயோகிக்கப்
படும்போது, சாதியை ஒழிக்க முடியும். அதற்கு ஒரு
தனி நூல் எழுத வேண்டும்.மார்க்சியத்தைப்
பிரயோகிப்பதற்கே தடையாக இருந்தால், எப்படி
சாதியை ஒழிக்க முடியும்? 

மார்க்சியம் என்பது விடுதலைக்கான தத்துவம்.
விடுதலை என்பது சமூக மாற்றத்தால் நடைபெறும்.
சமூகத்தை மாற்றுவது என்ற கொள்கை மார்க்சியத்துக்கு
மட்டுமே உண்டு. மற்ற எந்தத் தத்துவத்திலும்
சமூகத்தை மாற்றுவது என்பது கிடையவே கிடையாது.
**
மார்க்சியம் என்றால் என்ன என்று கேள்விக்கு பதிலளித்த
லெனின், "மார்க்சியம் என்பது மனித குல அறிவின்
ஒட்டுமொத்தம்" என்கிறார். எனவே மார்க்சிய அறிவு மட்டுமே
நிறையறிவு; மற்ற அறிவு அனைத்தும் குறையறிவே.
அதே போல, மார்க்சிய அறிவு மட்டுமே விடுதலைக்கான
அறிவு. மற்ற அறிவு எதுவும் விடுதலைக்கான அறிவு அல்ல.
இதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்க வேண்டியதில்லை.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக