வெள்ளி, 7 அக்டோபர், 2016

சிலப்பதிகாரம் கற்பது, ஷேக்ஸ்பியர் கற்பது
போன்றதல்ல மார்க்சியம் கற்பது.
"The theory of knowledge has many more aspects, 
but its essence is the criterion of practice" என்றார் ஸ்டாலின்.
இதன் பொருள்:  "அறிதலின் கோட்பாடு பல அம்சங்களை 
உள்ளடக்கியது; என்றாலும் அதன்  சாரம் நடைமுறை 
ஆகும்.
**
ஸ்டாலின் மேலும் கூறுகிறார்:
"
Hence, in reality, true knowledge is never divorced from struggle. 
No question therefore of true knowledge arising or existing 
in divorce from action."   
இதன் பொருள்: உண்மையான அறிவு என்பது
போராட்டத்தில் இருந்து முறித்துக் கொண்டு 
நிற்பதல்ல. செயல்பாட்டில் இருந்து துண்டிக்கப் 
பட்ட நிலையில் அறிவு தோன்றுவதும் இல்லை;
இருப்பதும் இல்லை.
**
எனவே நடைமுறையில் இல்லாமல், மாலைப் 
பொழுதை ரம்மியமாக்க மார்க்சியம் கற்பதால் 
எந்தப் பயனும் இல்லை. அதனால் எந்தப்
புரட்சிகர மார்க்சியரும் தோன்ற முடியாது.   


மார்க்சியத்தை எவர் வேண்டுமானாலும் கற்கலாம்.
அதற்குத் தடை இல்லை. மார்க்சியத்தைக் கற்பவர் 
எவராயினும் மார்க்ஸாலஜிஸ்ட் ஆகலாம். அவர் 
மார்க்சியர் (மார்க்சிஸ்ட்) ஆக மாட்டார். மார்க்சியக் கல்வி 
என்பது போராட்டத்தை உள்ளடக்கியது.


நல்லது. நீங்கள் படிக்கத் தொடங்கி இருப்பது 
வரவேற்கத் தக்கது. மார்க்சியத்தைப் பயிலுங்கள், 
பயிலுங்கள் என்றுதான் உலகெங்கும் உள்ள 
மார்க்சியர்கள் வற்புறுத்திக் கொண்டு 
இருக்கிறார்கள். மார்க்சியம் பயில்வது என்பது 
ஒரு கருநிலைச் செயல்பாடு. அது வளர்ந்து முதிர்ந்து 
பயன்தர வேண்டும்.
**
தமிழ்நாட்டில் மார்க்சிய வாசிப்பு என்பது மிகவும் 
பின்தங்கிக் கிடக்கிறது. அது முன்னேறுவது நல்லது.
இந்தக் கட்டுரை பொதுவான மார்க்சியக் கல்வியைப் 
பற்றியது அல்ல. இது ஒரு ஆழமான பொருள் பற்றியது.  


மனித வாழ்க்கை மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள்
ஆகியவற்றின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு அம்சமே 
போராட்டம்தான். உயிர் வாழ்வதே பல உயிரினங்களுக்குப் 
போராட்டம்தான். ஆரம்பத்தில் மனிதனுக்கும் அதுதான் 
போராட்டமாக இருந்தது. எனவேதான் "survaival of the fittest" 
என்ற கோட்பாட்டைச் சொன்னார். நிற்க.
**
எல்லாப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்கள் அல்ல.
மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தில் கவனம் 
செலுத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்புச் சிறுவர்கள் 
இருவர், ஒன்றாக உட்கார்ந்து படிக்கும்போது, ஒருவருக்குத் 
தெரியாததை மற்றவருக்குக் கற்றுக் கொடுப்பது 
வரவேற்கத் தக்கது. இது மனிதனின் கூட்டுச் 
செயல்பாடு ஆகும். இதெல்லாம் வர்க்கப் போராட்டம் 
ஆகாது.
**
படிப்பதும் படித்ததைப் பகிர்ந்து கொள்வதும் 
நல்ல செயல்களே. மனிதத் தன்மை உடைய 
செயல்கள். அவ்வளவே. அதையெல்லாம் 
போராட்டம் என்று சொன்னால், உண்மையான
போராட்டங்களை அவமதிப்பதாகி விடும்.
**
மார்க்ஸ் வெறும் போதனை மட்டுமே செய்யும் 
ஆசிரியர் அல்ல. மார்க்ஸை, அவரிடம் தவறு 
இருந்தால் விமர்சிக்கலாம். ஆனால் அவரைக் 
கொச்சைப் படுத்தக் கூடாது.    

மார்க்ஸ் வெறும் போதனை மட்டுமே செய்தவர் அல்ல.
வாழ்நாள் முழுவதும் போராடியவர். அரசை எதிர்த்துப் 
போராடினார். ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் 
போராடினார். நாடு நாடாக விரட்டப் பட்டார்.
சோற்றுக்கே திண்டாடினார். பெற்ற மக்களை 
வறுமைக்கும் பசிக்கும் பலி கொடுத்தார்.
தன் கோட்டை (coat) அடகு வைத்தார்.
**
மார்க்ஸ் என்றால் போராட்டம். போராட்டம் என்பதன் 
குறியீடாக மாறினார். அவர் போதனை மட்டுமே 
செய்த  பள்ளி ஆசிரியர் அல்ல. 

இந்தக் கட்டுரை "அறிதலின் கோட்பாடு" சார்ந்து 
(Theory of knowledge) ஒரு புதிய முன்மொழிவை 
முன் வைக்கிறது. மார்க்சியத்துக்கு முற்றிலும் 
புதியவர்கள் மார்க்சியத்தை அறிமுகம் செய்து 
கொள்வது பற்றிய கட்டுரை அல்ல இது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக