வியாழன், 13 அக்டோபர், 2016

சிறையை உடைத்தனர்! 341 கைதிகள் தப்பினர்!
மன்மோகன்சிங்கும் அ மார்க்சும் அடைந்த அதிர்ச்சி!
என்.ஜி.ஓ.க்களின் எடுபிடிகள் தொடை நடுங்கினர்!
-----------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
ஐ,மு,கூட்டணியின் ஆட்சி (UPA -I). மன்மோகன்சிங்
பிரதமர். ஆண்டு 2005. தேதி நவம்பர் 13, 2005. நேரம் இரவு.
ஒரு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறார் மன்மோகன்.
அதே நேரத்தில் இங்கு சென்னையில் இருக்கும்
பேராசிரியரும் அறிஞருமான அ மார்க்சும் அதே
செய்தியை NDTV செய்திகளில் கேட்டு அதிர்ச்சி
அடைகிறார்.

தனது அமைச்சரவை சகாக்களான லாலு பிரசாத்
யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரை உடனடியாக
வந்து தம்மைச் சந்திக்குமாறு அப்போதைய உள்துறை
அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு ஆணை இடுகிறார்
மன்மோகன் சிங்.

இங்கு சென்னையில், மிகவும் பதற்றத்தில் இருக்கும்
அறிஞர் அ மார்க்ஸ், உடனடியாக சக மார்க்சிய
அறிஞர்கள்  எஸ்.வி.ராஜதுரை, வ கீதா ஆகியோரைத்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூச்சிரைக்க
நடந்து விட்ட கொடுமையை விவரிக்கிறார்.    

பேசிக்கொண்டிருக்கும் போதே, அமெரிக்காவில்
இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அறிஞர் எஸ்.வி.
ஆருக்கு வருகிறது. "என்ன நடக்கிறது உங்கள் ஊரில்?
நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று எஜமானத் தோரணையுடன் அந்தக் குரல்
மிரட்டுகிறது.

"No, nothing happened; It is a FAKE news; highly exaggerated one. Please
don't be panicky; the matter is being acted upon"  என்று ஒரே போடாகப்
போடுகிறார் அறிஞர்; நெஞ்சாரப் பொய்தன்னைச்
சொல்கிறார். இப்படி மறுமுனையைச் சமாதானப்
படுத்திய பின், "Press freedom should be curbed. Manmohan is an
useless fellow" என்கிறார் அறிஞர். சக அறிஞர்களான
அ மார்க்சும் வ கீதாவும் ஆமோதிக்கின்றனர்.

இறுதியில் இதை முளையிலேயே கிள்ள என்னென்ன
செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதித்து
முடிவெடுக்க எண்பேராயத்தைக் கூட்ட அ மார்க்ஸ்
முடிவெடுக்கிறார்.

அங்கே டெல்லியில் சிவராஜ் பாட்டீலும் மன்மோகனும்
எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றனர்.

இவ்வாறு அரசும் மனித உரிமைப் "போராளி"(?)களும்
ஒரே நேரத்தில் அதிர்ச்சி அடையவும் பரபரப்பு
அடையவும் என்ன நடந்து விட்டது?

ஒரு சிறை உடைப்பு (JAIL BREAK) நடந்து விட்டது.
சிறை உடைப்பு என்பது ஒரு மார்க்சியத் தொடர்
(Marxist jargon). சிறைக் காவலைத் தகர்த்து, சிறையில்
உள்ள கைதிகளை விடுவிப்பதுதான் சிறை உடைப்பு.
உலகில் நிகழ்ந்த எல்லாப் புரட்சிகளின் போதும்
சிறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. பிரெஞ்சுப்
புரட்சியின்போது, பாஸ்டைல் சிறை தகர்க்கப்
பட்டதை வரலாற்றில் படித்ததை இங்கு நினைவு
கூர்க.

பீகாரில் ஜகன்னாபாத் என்று ஒரு நகரம். இது மாவட்டத்
தலைநகர். இங்குள்ள சிறைதான் உடைக்கப் பட்டது.
341 கைதிகள் தப்பினர். ஆயிரம் பேருடன் திரண்டு வந்த
மாவோயிஸப் போராளிகள் சிறைக்காவலைத் தகர்த்து
தங்கள் தோழர்களை விடுவித்தனர்.

இந்திய அரசு மூச்சடைத்துப் போய்விட்டது. இந்தச்
செய்தி வெளியே பரவாமல் தடுக்க முற்பட்டது.
செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது
தடியடி நடத்தப் பட்டு விரட்டி அடிக்கப் பட்டனர்.
செய்தியை வெளியிட விடாமல் செய்தி நிறுவனங்கள்
மிரட்டப் பட்டன. என்றாலும் செய்தி கசிந்து மெல்ல
மெல்லப் பரவியது.

ஏகாதிபத்திய தாசர்களும் அடிவயிற்றில் குத்து
விழுந்தது போல் கலங்கினர்.நக்சல்பாரியை
ஒடுக்கிய பின்னரும், மீண்டும் பீனிக்ஸ் பறவை
போலத் தழைப்பது கண்டு அதிர்ந்தனர். மக்கள்
திரண்டெழுந்து வீதிக்கு வந்தால், அவர்களை எந்த
ராணுவத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்ற
உண்மை அவர்களுக்கு உறைத்தது. வரலாற்றில்
தாங்கள் படித்த புரட்சியெல்லாம் நினைவுக்கு
வந்து அவர்களைப் பீதி ஊட்டியது.

மார்க்சியத்தை இனி ஒரு அங்குலம் கூட
அனுமதிக்க முடியாது என்று அவர்கள்
தீர்மானித்தனர். சத்திரிய முறையில் மார்க்சியத்தை
வெல்ல முடியாது என்று உணர்ந்த அவர்கள்
சாணக்கிய முறையில் மார்க்சியத்தைக் கருவறுக்கத்
திட்டமிட்டனர். அதற்கேற்ற ஆயுதமான அடையாள
அரசியலைக் கையில் எடுத்தனர்.

மார்க்சியம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம்
அதை அகற்றி விட்டு, அடையாள அரசியலை
அதன் இடத்தில் வைப்பது என்ற ஒற்றை நிகழ்ச்சி
நிரலுடன் களத்தில் இறங்கினர்.

பின்நவீனத்துவத்தை தமிழகத்தில் பெருமளவில்
பரப்பினர். NGO எடுபிடிகள் ஒவ்வொருவரையும்
புரட்சி முத்திரை குத்தி ஆதரித்தனர்.

இன்னுமொரு சிறை உடைப்பு இந்தியாவில்
நடைபெறாது என்ற உறுதியைத் தங்கள்
எஜமானர்களுக்கு அனுப்பினர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs)
என்றால் என்ன? அவற்றை நடத்துபவர்கள்
யார், யார்? அவர்களுக்கு நிதி எங்கிருந்து
வருகிறது? அவர்களின் அடையாள அரசியல்
எப்படி மார்க்சியத்தை, மக்கள் எழுச்சியைக்
காயடிக்கிறது?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுங்கள். இதற்குப்
பதில் தெரியாமல் அரசியலில் இருப்பது முழுமூடத்தனம்
ஆகும்.

எஸ்.வி.ராஜதுரை, அ மார்க்ஸ், வ கீதா ஆகியோர் யார்,
யாருடைய நலனுக்கு அவர்கள் சேவை செய்கிறார்கள்
என்று புரிந்து கொள்ள முயலுங்கள். இதற்கு உங்களுக்கு
பதில் கிடைக்கும்போது, கிழக்கு சிவக்கத் தொடங்கி
இருக்கும்.
**********************************************************************  
     
        


   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக