செவ்வாய், 17 மே, 2016

மகிழ்ச்சிக் கடலில் பாஜக!
பதற்றத்திலும் பரபரப்பிலும் மற்றக் கட்சிகள்!
-------------------------------------------------------------------------------------
தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 48 மணி
நேரத்திற்கும் குறைவான நேரமே  இருக்கிறது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும்
தொண்டர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

ஆனால், பாஜக கட்சியானது எந்த விதமான
பதற்றமோ, பரபரப்போ, டென்ஷனோ இல்லாமல்
அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிறது.
பாஜக வேட்பாளர்கள், தொண்டர்களின் ரத்த
அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள்
பாஜகவினர் அனைவர்க்கும் ரத்த அழுத்தம் 80/120
என்று இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இது ஏன்? திமுக-அதிமுகவினரின் SYSTOLIC அழுத்தம்
170 என்று இருக்கும்போது, பாஜகவினர் எப்படி
120இல் ரத்த அழுத்தத்தைப் பேண முடிகிறது?

காரணம் இதுதான். பாஜகவினருக்கு உண்மை தெரியும்.
எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது. தமிழக சட்டமன்றத்தில்
பூஜ்யத்தில் இருக்கிறார்கள். இப்போதும் அதே பூஜ்யம்
உறுதி. எனவே நஷ்டம் எதுவும் இல்லை.

போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் தோல்வி
என்றாலும், பெருவாரியான இடங்களில் டெப்பாசிட்
காலி என்றாலும் அவர்களுக்கு கவலை இல்லை.

எனவே கவலை இல்லாத இடத்தில், மகிழ்ச்சி துள்ளி
விளையாடும். எனவே பாஜக பதற்றம் இல்லாமல்
இருக்கிறது.

தேர்வுக்குச் செல்லும் சில மாணவர்கள் வெறுமனே
ATTEMPT செய்ய வேண்டும் என்பதற்காக தேர்வு
அறைக்குச் செல்வார்கள். தங்களின் ரோல் நம்பரை
விடைத்தாளில் எழுதுவார்கள். கேள்வித்தாளை
பொழுதுபோக்காக வாசிப்பார்கள். அரை மணி நேரம்
முடிந்ததும் அரைக் கண்காணிப்பாளரிடம்
விடைத்தாளைக் கொடுத்து விட்டு தேர்வறையை
விட்டு வெளியேறி விடுவார்கள். இவர்களைப்
போலத்தான் பாஜகவும்.
*******************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக