செவ்வாய், 24 மே, 2016

ஜெயலலிதா பழி வாங்குவார் என்று அச்சம்!
மக்கள் நலக் கூட்டணியை விட்டு விலக
பிரேமலதா முடிவு!
--------------------------------------------------------------------------------
1) போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும்
விஜயகாந்த் உட்பட டெப்பாசிட் இழந்து,
2) கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்
ரத்து செய்து.
3) முரசு சின்னத்தையும் இழந்து

குஷ்டரோகப் பிச்சைக்காரனை விடக் கேவலமாக
நடுத்தெருவில் அனாதையாக நிற்கும் இந்த
மோசமான நிலையில்தான் பிரேமலதாவுக்கு
புத்தி வந்திருக்கிறது.

ஜெயலலிதா நினைத்தால் விஜயகாந்தையும்
தன்னையும் அவரின் செருப்புக் காலால்
ஒரு புழுவை நசுக்குவது போல நசுக்கி விடுவார்
என்ற உண்மை உறைத்ததும் அஞ்சத் தொடங்கி
விட்டார் பிரேமலதா.

இந்த இக்கட்டான நிலையில் மக்கள் நலக்
கூட்டணியாலும், மக்கள் மத்தியில் செல்லாக்
காசாகிப்போன அதன் தலைவர் வைகோவாலும்
தன்னைக் காப்பாற்ற இயலாது என்ற உண்மை
உறைக்கிறது பிரேமலதாவிற்கு.

எனவே தன்னையும் தன் குடும்பத்தையும்
காப்பாற்றிக் கொள்ள என்ன செய்வது என்று
தீவிர ஆலோசனை செய்து வருகிறார் பிரேமலதா.

பாஜக மத்தியில் ஆளும் கட்சி என்பதால், மநகூவில்
இருந்து விலகி, பாஜக அணியில் சேரலாமா
என்று யோசித்து வருகிறார் பிரேமலதா.

கூடிய விரைவில் ஹெச் ராஜாவின் காலில் விழுந்து
வணங்கி, பாஜகவில் தேமுதிக சேரும் என்பது
தெளிவாகப் புலப்படுகிறது.
****************************************************************    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக