புதன், 11 மே, 2016

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு குறித்த
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பவர்கள்
தனியார்மயக் கைக்கூலிகளே!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
1) இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு தனியார்
மருத்துவக் கல்லூரியும் இனிமேல் நுழைவுத் தேர்வு
நடத்த முடியாது.

2) இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு தனியார்
நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் இனிமேல்
நுழைவுத் தேர்வு நடத்த முடியாது.

3) தனியார் சுயநிதித் திமிங்கலங்களுக்கு
மரண அடி கொடுக்கிறது இத்தீர்ப்பு.

4) ஒரு  MBBS சீட்டுக்கு ஒரு கோடி முதல் 5 கோடி
வரை கேபிடேஷன் கட்டணம் வாங்கும்
தனியார் முதலைகளுக்கு இத்தீர்ப்பு மரண அடி.

5) ஜேப்பியார், பாரிவேந்தர் போன்ற சுயநிதி
முதலைகளின் கைக்கூலிகள் உச்சநீதிமன்றத்
தீர்ப்பை எதிர்த்துச் சாமியாடுகிறார்கள்.
***************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக