வெள்ளி, 27 மே, 2016

வைகோவுக்கு ஒபாமா பாராட்டு!
கம்யூனிசத்துக்குக் கொள்ளி வைத்த வைகோ வாழ்க!
-----------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா என்பது உலக முதலாளித்துவத்தின்
தலைமைச் செயலகம். அமெரிக்காவில் பல கட்சிகள்
உண்டு. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கிடையாது.
உலகத்தின் எந்தப் பகுதியில் கம்யூனிசம் தோல்வி
அடைந்தாலும், அதற்கு மகிழ்கிற நாடு அமெரிக்கா.

தற்போது 2016 சட்ட மன்றத் தேர்தலின் முடிவில்,
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி டெப்பாசிட்
இழந்து துடைத்து எறியப் பட்டுள்ளது.

இதன் விளைவாக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு இதுவரை
இருந்து வந்த தேசியக் கட்சி என்ற அந்தஸ்து
பறிபோய் விட்டது.

தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற, ஒரு கட்சியானது
நான்கு மாநிலங்களில் 6 சதம் வாக்குகளைப் பெற்று
இருக்க வேண்டும். (அல்லது நாடாளுமன்றத்தில்
மக்களவையில் 11 எம்.பி.க்களைப் பெற்றிருக்க வேண்டும்).

கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று
மாநிலங்களில் மட்டுமே தற்போது மார்க்சிஸ்டு
கட்சிக்கு 6 சதம் வாக்கு உள்ளது. தமிழ்நாட்டில்
சட்ட மன்ற இடங்களும் இல்லை.வாக்கு 0.7 சதம்
மட்டுமே. எனவே மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில்
கிடைத்த தோல்வியின்  விளைவாக தனது தேசியக்
கட்சி அந்தஸ்தை இழந்தது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் துடைத்து
எறியப் படுவதற்கு மூல காரணமாக இருந்த,
வைகோவின் சேவையைக் கண்டு ஒபாமா
மகிழ்கிறார். எனவே அவர் வைகோவைப் பாராட்டிச்
செய்தி அனுப்பி உள்ளார்.

கம்யூனிசத்துக்கு கொள்ளி வைத்த வைகோவே,
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று
அந்த வாழ்த்துச் செய்தி கூறுவதாக, தாயக
அன்பர்கள் பெருமை அடைகிறார்கள்.
***************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக