ஞாயிறு, 15 மே, 2016

தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்!
--------------------------------------------------------------------
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை
அளிப்பது அவற்றின் கடமை. வாக்களிக்கும்
மக்களுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து
வாக்குறுதிகளைக் கோர உரிமை உண்டு.

மக்கள் நல அரசு (welfare state) என்ற இலக்கணப்படி,
மக்களுக்கு பல இலவசங்களை வழங்க
இருப்பதாக வாக்குறுதி அளிக்கவும் அரசியல்
கட்சிகளுக்கு உரிமை உண்டு. மேலும் அது
அக்கட்சிகளின் கடமையும்கூட.

இதைக் கேள்வி கேட்கவோ, இதற்கு விளக்கம்
கேட்கவோ தேர்தல் ஆணையத்துக்கு உரிமை
இல்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்
பேரில் தயாரிக்கப் படுகின்றன.

தேர்தல் ஆணையம் இதற்கு விளக்கம் கேட்டு
என்ன செய்யப் போகிறது? தேர்தல் ஆணையம்
என்ன பொருளாதார நிபுணர்களால் நிரம்பி
வழிகிறதா?

தேர்தலை நடத்துவது மட்டும்தான் தேர்தல்
ஆணையத்தின் பொறுப்பே தவிர, கட்சிகளின்
பொருளாதாரக் கொள்கைகளை, அவற்றின்
அடிப்படையில் அமைந்த தேர்தல் வாக்குறுதிகளைக்
கேள்வி கேட்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை
கிடையாது. எனவே தேர்தல் ஆணையத்தின் செயல்
அத்துமீறல் ஆகும்.
*****************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக