வெள்ளி, 13 மே, 2016

தமிழ் தமிழ் என்று குதிப்பதில் பயனில்லை!

ஒரு தமிழ்க் கட்டுரையில் 70 ஆங்கிலச் சொற்கள் ஏன்?
சொற்குறுக்கங்களை தமிழால் கையாள முடியவில்லை!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
தமிழ் கம்ப்யூட்டர் மார்ச் (16-31) இதழில், "இணைய
நடுநிலையைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில்
நியூட்டன் அறிவியல் மன்றம் ஒரு கட்டுரையை
எழுதி உள்ளது. ஆறு பக்க அளவிலான அக்கட்டுரையில்
70 ஆங்கிலச் சொற்கள் அடைப்புக் குறிக்குள் இடம்
பெற நேர்ந்தது.

URL, HTML, http, TRAI, COAI, OTT services, GPRS, EDGE, LTE,
TCP/IP, ISP  ஆகிய பல்வேறு சொற்குறுக்கங்களை
தமிழில் சொல்ல இயலாமல், ஆங்கிலத்தைப்
பயன்படுத்த வேண்டியுள்ளது.

இவை தவிர, யூடியூப், வாட்சப், கூகுள், டிவிட்டர்
ஆகிய ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழில்
எழுதப் பட்டுள்ளன. இவை பெயர்கள் என்பதால்
தவறில்லை.

சொற்குறுக்கங்களைக் கையாள்வதற்கு  தமிழ்
ஏற்றதாக இல்லை. கணினி உலகம் கணக்கற்ற
சொற்குறுக்கங்களைக் கொண்டது.

SMPS (Switch Mode Power Supply), ATM (Asynchronous Transfer Mode)
போன்ற அடிக்கடி பயன்படும் சொற்குறுக்கங்களை
தமிழில் எழுதுவது எப்படி? என்ன தீர்வு?

தற்போதைய நடைமுறையில் ஆங்கிலத்தை
அப்படியே ஆங்கிலமாகவே தமிழ்க் கட்டுரையில்
இடம் பெறச் செய்கிறோம். வேறு வழி இல்லை!
      
தமிழில் அறிவியலைச் சொல்லும் முயற்சிகளுக்கு
அங்கீகாரமோ ஆதரவோ இல்லை! தமிழ் தமிழ்
என்று குதிக்கும் எவரும், இத்தகைய சிக்கல்களைக்
கண்டு கொள்வது இல்லை.
*******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக