வியாழன், 12 மே, 2016

மத்திய அரசில் பணியாற்றியபோது இரண்டு
சம்பளக் கமிஷன்களைச் சந்திக்க நேர்ந்தது.
நீதியரசர் பி என் சிங்கால் தலைமயிலான
4ஆவது கமிஷன் மற்றும் நீதியரசர்
ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான
5ஆவது கமிஷன்.
**
எங்கள் சங்கத் தலைவர் மறைந்த தோழர் ஜெகன்
அவர்கள் நான்காவது சம்பளக் கமிஷனில்
சாட்சியம் அளிப்பதை முன்னிட்டு, பல்வேறு
களப்பணிகளை அவருடன் மேற்கொண்டோம்.
அப்போது CGHS மருத்துவர்களை, CGHS
மருத்துவமனைகளுக்குச் சென்று சந்தித்தோம்.
அப்போது மருத்துவர்கள் பலரும் NPA
(Non Practicing Allowance) தொகையை அதிகரிக்குமாறு
கோரினார்கள். அதன்படி மகஜர் அளித்து
NPA அதிகரிக்கப் பட்டது. நிற்க.
**
அரசுப்பணியில் உள்ள மருத்துவர்கள், NPA  பெறும்
அருகதை உடைய (ELIGIBLE) மருத்துவர்கள் ஆவர்.
அவர்கள் NPA பெறும் பட்சத்தில்,தனியாக மருத்துவம்
(PRIVATE PRACTICE) செய்யத் தடை உண்டு.
ஆனால் NPA பெறாத அரசு மருத்துவர்கள் தனியாக
மருத்துவம் செய்ய அனுமதி உண்டு. இதில்
தீர்மானிக்கிற அம்சம் NPAதான்.  
**
மத்திய அரசு, மாநில அரசு என எல்லா அரசுகளின்
மருத்துவர்களுக்கு இது பொருந்தும். மற்றப்படி,
CCS Conduct Rulesஇல் இது பற்றியெல்லாம் ஒன்றும்
கிடையாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக