வெள்ளி, 13 மே, 2016

உலகைப் பற்றிய உங்களின் முதலாளித்துவக்
கண்ணோட்டத்தை நான் ஏற்கவில்லை. அதை
நிராகரிக்கிறேன். அறிவு பற்றிய மார்க்சியக்
கண்ணோட்டம் தங்களுக்குப் புரியவில்லை
என்றால், நான் ஒன்றும் செய்ய இயலாது.
மார்க்சிய அறிவே துளி கூட இல்லாத  நிலையில்,
தங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை
என்று என்னால் உணர முடிகிறது. எனினும் நான்
அறியாமையை ஏளனம் செய்பவன் அல்ல. 
**
அருள் கூர்ந்து என்னுடைய பதிவில் தாங்கள்
கமென்ட் போட்டால் என்னால் படிக்க இலகுவாக
இருக்கும்.
------------------------------------------------------------------------------
மார்க்சியம் அறியாதவர்களை முட்டாள்களாகக்


அறிவைப் பற்றிய மார்க்சியப் பார்வை
( theory of knowledge) நான் உருவாக்கியதல்ல.
19ஆம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம்
நூறாண்டில் உலகில் சுவடு பதித்த மார்க்சியத்தின்
உலகக் கண்ணோட்டமீ இதற்கு அடிப்படை.
சமூக மாற்றத்துக்கும் மனித குல விடுதலைக்கும்
பயன்படாத அல்லது அவற்றில் இருந்து
துண்டித்துக் கொண்டு நிற்கிற அறிவு முதலாளித்துவ
அறிவு. அது சுரண்டலுக்கே உதவும்.
**
அறிவுரீதியாக சமூக மாற்றத்துக்கும் மனிதகுல
விடுதலைக்கும் எவர் பங்களித்துள்ளாரோ
அவர் அறிவாளி என்பது மார்க்சிய வரையறை.
இதில் அணுவளவு கூட சமரசத்துக்கு இடமில்லை.  

அறிவு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை
(Marxist Doctrine of knowledge) ஏற்காத, அல்லது புரிந்து
கொள்ள மறுக்கிற, அல்லது புரிந்து கொள்ள இயலாத
நிலையில் அறிவை எப்படி அளவிட முடியும்?
"The most profound music is merely a sound to unmusical ears"
எவ்வளவுதான் தலைசிறந்த இசையாக இருந்தாலும்,
இசையறிவு பெறாத செவிகளைப் பொருத்தமட்டில்
அது வெற்று ஓசைதான்  என்பார் காரல் மார்க்ஸ்.
அது போல, மார்க்சியம் பற்றி அணு அளவு கூட
அறிந்திராத நிலையில், அறிவு பற்றிய மார்க்சியக்
கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாத நிலையில்,
அறிவை எப்படி அளவிட முடியும்? 



1) சமூக மாற்றத்துக்கு 2) மனிதகுல விடுதலைக்கு
ஒருவர் அறிவுரீதியாக (intellectually) அளித்த
பங்களிப்பு என்ன என்பதை வைத்தே ஒருவர்
அறிவாளியா இல்லையா என்பதை அளவிட
முடியும். இதுதான் மார்க்சியக் கோட்பாடு. 

மார்க்சியம் என்பது மனிதகுல அறிவின் ஒட்டுமொத்தம்
என்று மார்க்சியத்தை வரையறுப்பார் லெனின்.
எனவே மார்க்சின் காலத்துக்கு முந்திய
அறிஞர்கள் அவர்களின் சமூக மாற்றத்திற்கான
பங்கை வைத்தே அளவிடப் படுகிறார்கள்.
குற்றம் புரிபவர்களுக்கும் அறிவு உண்டுதான்.
அவர்கள் குற்றம் புரிவதற்கான சூழலை மனதில்
கொள்கிறது மார்க்சியம். அந்தச் சூழலை மாற்றும்போது
குற்றங்கள் மறைந்து விடும். ஆக, குற்றம் புரிபவர்களின்
சூழலை மாற்றுவதில் மட்டுமே மார்க்சியம் அக்கறை
கொள்கிறது. முதலாளித்துவம் அக்கறை கொள்கிற
விஷயங்கள் எல்லாவற்றிலும் மார்க்சியம் அக்கறை
கொள்ளாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக