புதன், 11 மே, 2016

தனியார் நுழைவுத் தேர்வு நடத்த முடியாது என்ற
உச்சநீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்து
சங்கராச்சாரி ஜெயந்திரர் ஆவேசம்!
ஜெயேந்திரரின் பிருஷ்டக் கழிவுகள் சந்தனமா?
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
எந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியோ
அல்லது நிகர்நிலைப் பல்கலையோ அவர்கள்
எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும்
இனிமேல் நுழைவுத் தேர்வு நடத்த முடியாது.
சுயநிதிக் கொள்ளைக் கூடம் நடத்தும் தனியார்
முதலாளிகளின் மண்டையில் விழுந்த மரண அடி
இந்தத் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பு வந்ததும் கொதித்துப் போனார்
மஹா பெரியவாள் ஜெயேந்திரர் அவர்கள். மஹா
பெரியவாள் பல மருத்துவக் கல்லூரிகளை நடத்தி
தேசசேவை செய்கிறாரோன்னோ!

மஹா பெரியவா உத்தரவின் பேரில் சுயநிதி
அதிபர்களின் மந்திராலோசனைக் கூட்டம்
ஒரு ஸ்மார்த்த பிராமணர் இல்லத்தில்
மன்னிக்கவும் ஆத்தில் நடைபெற்றது.

மற்ற நேரத்தில் மிலேச்சராகவும் கிறிஸ்துவராகவும்
மாட்டுக்கறி சாப்பிடும் இழிந்த பிறவியாகவும்
பாவிக்கப்படும் ஜேப்பியார், மற்றும் பச்சமுத்து
உடையார், ஏ.சி.சண்முக முதலியார் உள்ளிட்ட பல
சுயநிதி முதலைகள் அங்கு பிரசன்னமாகி இருந்தன.

பல "சமூகநீதிப் போராளி"களும் அங்கு பிரசன்னமாகி
இருந்தது வாசகர்களுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்தலாம். ஆனால் நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு ஆச்சரியம் ஏதுமில்லை.

எடுத்த எடுப்பிலேயே மஹா பெரியவா சாபம்
கொடுக்க ஆராம்பிச்சா! "இவாளெல்லாம்
ஜட்ஜா? இவா நாசமாப் போவா! நாசமாப்போவா!!"

"என்ன செலவானாலும் பரவால்ல, இந்த
ஜட்ஜ்மென்ட்ட ரத்து பண்ணனும்; மீண்டும்
நாம என்டரன்ச நடத்தனும். ஜட்ஜ்மென்ட்ட
எதுத்து தமிழ்நாட்ல போராட்டம் வெடிக்கனும்;
அதுக்கு என்னென்ன செய்யணுமோ செய்ங்கோ" 
என்று உத்தரவு போட்டார் மஹா பெரியவா.

"இந்த சோஷியல் மீடியாங்கராளே, அதுலயும்
நன்னா எழுதுங்கோ, இந்த ஜட்ஜஸ ஒரு வழி
பண்ணனும், எழுதறவாள நன்னா  என்கரேஜ்
பண்ணுங்கோ" என்றார் மஹா பெரியவா.

அப்போது ஒரு "சமூகநீதிப் போராளி" எழுந்து
மிகவும் பவ்யமாக வாய் புதைத்த வண்ணம்
"அதல்லாம் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம்,
பெரியவா கவலப் பட வேண்டாம், கொஞ்சம்
செலவு ஆகும்" என்றார் சரீரத்தைக் குறுக்கி.

உடனே காரியஸ்தரை அழைத்த மஹா பெரியவா
கண்ணைக் காட்ட பட்டுவாடா சுபமாக
நடந்தேறியது. மங்களம், சுப மங்களம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒழிக!
மஹா பெரியவா ஜகத்குரு ஜெயேந்திரர் வாழ்க!
சமூகநீதி ஓங்குக!
********************************************************************              
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக