சனி, 7 மே, 2016

போலி நாத்திகத்தின் முட்டாள்தனமான வாதங்களை 
விழுங்கிச் சீரணித்த ஆத்திகம்
அறிவியல் வழி நாத்திகத்தின் முன் நிற்க இயலவில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
நூறாண்டு காலமாக தமிழகத்தில் போலி நாத்திகம்
கோலோச்சி வந்தது. ஆத்திகத்தை நோக்கி
முட்டாள்தனமான கேள்விகளை போலி நாத்திகம்
வீசியது. நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன்,
வில்லன் நடிகர் எம்.ஆர்.ராதா ஆகியோர் இந்த
மூடத்தனத்தின் முன்னோடிகளாக இருந்தனர்.

1) பாற்கடல் தயிர் ஆகுமா?
2) பிரம்மனின் நாக்கில் சரஸ்வதி குடியிருப்பாள்
என்றால், அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்?
( மறையவன் நாவில் அவள் இருப்பதும்
உண்மையானால், மலஜலம் கழிப்பது
எங்கே எங்கே?...என்எஸ் கிருஷ்ணன் பாடல்)
இவை போன்ற அறிவுபூர்வமான கேள்விகளை
எழுப்பி சுய மகிழ்ச்சி அடைந்தனர் மூட நாத்திகர்கள்.

மதிமுகம், நிலாமுகம், தாமரைமுகம் என்பன
எல்லாம் உருவகங்கள். தமிழ் இலக்கணம்,
இலக்கியம் படித்திருந்தால் இது தெரிந்திருக்கும்.
எழுதப் படிக்கத் தெரியாத எம் ஆர் ராதாவுக்கு
என்ன இலக்கணம் தெரியும்? 
  
இந்த மூட நாத்திகத்தை ஆத்திகம் சுலபமாக
முறியடித்து விட்டது. விழுங்கிச் செரித்து ஏப்பம்
விட்டு விட்டது. இதன் விளைவாக தமிழகத்தில்
நாத்திகத்தின் செல்வாக்கு பெரிதும் குலைந்தது.
ஆத்திகர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.

1960இல் சபரிமலைக்குச் சென்றவர்கள் சில ஆயிரமே.
இன்று கோடிக் கணக்கில் தமிழகத்தில் இருந்து
செல்கின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
வழிபாடு கோடியைத் தொடுகிறது. இதற்கெல்லாம்
காரணம் தமிழகத்தில் இருந்த போலி நாத்திகமே.

இன்றைக்கு நவீன இயற்பியலின் சார்பியல்
கோட்பாடு,குவான்டம் கோட்பாடு ஆகியவற்றின்
அடிப்படையில், அறிவியல் வழியிலான
பொருள்முதல்வாத அடிப்படையில், காத்திரமான
சில கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் கொள்கையை
நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று வருகின்றனர்.

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி,
ஆத்திக-நாத்திக விவாதத்தை அறிவியல் தளத்திற்கு
எடுத்துச் சென்றவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.
சுஜாதாவுக்கு முன், ஆத்திக-நாத்திக விவாதம்
அறிவியல் தளத்தில் நடைபெற்றதே இல்லை.

தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு
பல்வேறு போலிப் பகுத்தறிவுவாத அமைப்புகள்
அறிவியலுக்கு எதிரான தங்கள் தன்மையினால்
நாத்திகத்தின் முன் மண்டி இட்டு வாழ்கின்றன.
இதுதான் தமிழ்நாட்டின் கள நிலவரம்.
********************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக