செவ்வாய், 10 மே, 2016

நுழைவுத் தேர்வு தமிழில் நடத்த வேண்டும்
என்ற கோரிக்கையின் தர்க்கம் குறித்து
இசக்கிமுத்து அண்ணாச்சி கேள்வி!
----------------------------------------------------------------------------
காட்சி-1
-----------------
இடம்: வீரவநல்லூர் காந்தி சிலை
நேரம்: இன்று (10.05.2016) காலை 11 மணி
பாத்திரங்கள்:
இசக்கிமுத்து அண்ணாச்சி, பெரியாரிஸ்டு தமிழரசன்.

பெரி: MBBS படிப்புக்கு ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு
              வைக்குது அரசாங்கம். இதைத் தமிழில் வைக்கணும்.
இ.மு: நல்லது. இத நான் ஆதரிக்கிறேன்.  ஆனா
எனக்கு சில கேள்வி இருக்குது. கேக்கட்டுமா?

பெரி: கேளுங்க
இ.மு: MBBS படிப்பு தமிழில் இருக்குதா, இங்கிலீஷில்
இருக்குதா?
பெரி: இங்கிலீஷில்தான் இருக்குது.
இ.மு: தமிழ் மீடியத்திலே MBBS கிடையாதா தம்பி?
பெரி: கிடையாது அண்ணாச்சி.

இ.மு: MBBS  படிப்புக்கான புத்தகம் எல்லாம்
தமிழில் இருக்குதா தம்பி?
பெரி: இல்ல அண்ணாச்சி, எல்லாப் புஸ்தகமும்
இங்கிலீஷில்தான் இருக்கு.

இ.மு: MBBS தேர்வை மாணவர்கள் தமிழில் எழுத
வாய்ப்பு உண்டா?
பெரி: இல்ல அண்ணாச்சி, அஞ்சு வருஷத்துத்
தேர்வையும் இங்கிலீஷில்தான் எழுதணும்.

இ.மு:  தம்பி, தமிழ் மீடியத்துல MBBS படிக்க
முடியாதுங்கிறே, புஸ்தகம் எல்லாம்
இங்கிலீஷ்லதான் இருக்குங்கிறே, அஞ்சு
வருஷத்துத் தேர்வும் இங்கிலீஷ்லதான்
எழுதணுங்கிறே. இப்படி எல்லாமே இங்கிலீஷ்தான்
என்று இருக்கும்போது, நுழைவுத் தேர்வும்
இங்கிலீஷ்ல இருந்தா என்ன தப்பு? இதுக்கு
நீ விளக்கம் சொல்லு.

பெரி:......................
இ.மு: நுழைவுத் தேர்வை இங்கிலீஷில்
எழுத முடியாத பையன், எப்பிடி இங்கிலீஷ்ல
உள்ள MBBS படிப்பை படிப்பான்?
பெரி:.....................
*********************************************************************     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக