செவ்வாய், 10 மே, 2016

ஏற்கனவே நீட்-1 மே 1 தேதியில் நடந்து முடிந்து விட்டது.
நீட்-2 தேர்வு ஜூலை 24 தேதியில் நடைபெறும் என்று
அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வை, அறிவிக்கப்பட்ட
தேதியில் இருந்து ஒரு மாதம் தள்ளி வைத்து, ஜூலை 24க்குப்
பதிலாக, ஆகஸ்ட் 24 அன்று நடத்த வேண்டும் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது, எமது பதிவில்
இது மிகத் தெளிவுடன் குறிப்பிடப் பட்டு உள்ளது.
///ஜூலை 24 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ள நீட் இரண்டாம் 
கட்டத் தேர்வை/// என்று தெளிவாக உள்ளது.
**
நுழைவுத் தேர்வு 1)தேவையா தேவைஇல்லையா 
2) மாநில அரசு நடத்தலாமா என்பதெல்லாம் வேறு விவாதம்.
இந்தக் கோரிக்கை மாணவர் நலன் கருதி எழுப்பப் 
படுகிறது.மாநில அரசே நுழைவுத் தேர்வை நடத்தலாம் 
என்று நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று வைத்துக் 
கொள்வோம். அப்போதும் கூட, அந்தத் தேர்வை 
ஜூலை 24 தேதியில் நடத்துவதற்கு நியூட்டன் அறிவியல் 
மன்றம் அனுமதிக்காது.
**
ஏற்கனவே நீட்-1 எழுதிய மாணவர்கள் நீட்-2 தேர்வு எழுத 
அனுமதிக்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம் 
கூறியது; கோரியது. அதில் வெற்றியும் பெற்றது. இந்த 
வெற்றியானது தேர்வ எழுதிய ஆறு லட்சம் மாணவர்களின் 
வயிற்றில் பாலை வார்த்துள்ளது. நியூட்டன் அறிவியல் 
மன்றத்தைத் தவிர வேறு எந்த அமைப்போ, தனி நபர்களோ 
இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை என்பது 
குறிப்பிடத் தக்கது.   

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ 
இவையெல்லாம் அரசியல் நடவடிக்கைகள். ஆனால் 
இது ACADEMIC நடவடிக்கை. அரசியல் நடவடிக்கைக்கு 
ஆயிரம் பேர் திரள்வார்கள் சுலபமாக. ஆனால் ACADEMIC 
நடவடிக்கையை மேற்கொள்ளத் தகுதியானவர்கள் 
அந்த ஆயிரம் பேரில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
ஆக, அந்த மிகப் பிரம்மாண்டமான வெற்றிடத்தை--
வேறு எவரும் நிரப்பாத, வேறு எவராலும் நிரப்ப இயலாத-- 
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரப்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக