செவ்வாய், 10 மே, 2016

இது கற்பனையான ஒரு உரையாடல் என்றோ
கற்பனையான நாடகக் காட்சி என்றோ எவரேனும்
கருதினால், அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
ஏனெனில் இது உள்ளபடியே இன்று வீரவநல்லூரில்
நடந்த நிகழ்ச்சி. இதில் காட்சி-1 மட்டுமே இப்போது
சொல்லப் பட்டுள்ளது. மற்றக் காட்சிகள்
அடுத்தடுத்துச் சொல்லப் படும்.

ஏழு மாநில மொழிகளில் நீட் தேர்வை நடத்துவது
குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது
என்ற செய்தியை, செய்திகளில் அக்கறை உள்ள
வாசகர்கள் அறிவார்கள். அந்த ஏழு மொழிகளாவன:-
1) தமிழ் 2) தெலுங்கு 3) மராத்தி 4) குஜராத்தி 5) வங்காளி
6) அசாமியம் (Assameese) 7) இவற்றுடன் இந்தி.
 
இந்தியில் நீட் தேர்வை நடத்துவதை MCI
(மருத்துவக் கவுன்சில்) ஆதரிக்கவில்லை.
ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று
MCI உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

நீட் தேர்வு குறித்து எத்தகைய மாற்றுக்
கருத்தையும் எவரும் சொல்லலாம். ஆனால்
அருள்கூர்ந்து, நீட் தேர்வு குறித்த செய்திகளைத்
தெரிந்து கொண்டு கருத்துச் சொல்வது
வரவேற்கத் தக்கது.

தங்களின் கவலை குறித்து உச்சநீதிமன்றம்
கவனத்தில் கொண்டுள்ளது. எனவேதான் நீட்
தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக, ஒரு
அதிகாரம் படைத்த குழுவை உச்சநீதிமன்றம்
அமைத்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள்
தலைமை நீதிபதி லோதா அவர்கள் தலைமையில்
மூவர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
இது நீட் தேர்வை முற்றிலுமாகக் கண்காணிக்கும்.

தமிழ் உட்பட ஏழு மொழிகளில் நடத்த
அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது. இது குறித்த
தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளிவரும்
என்று உச்சநீதிமன்ற வட்டாரம் தெரிவிப்பதாகச்
செய்திகள் வந்துள்ளன. எனவே உச்சநீதிமன்றத்
தீர்ப்பு வந்த பிறகு இது பற்றி விவாதிக்கலாம்.
**
இரண்டாவதாக, நீட் தேர்வு (அதாவது AIPMT தேர்வு)
இந்தி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடந்துள்ளது.
என்னிடம் கேள்வித்தாள் இருக்கிறது. ஆங்கிலம்
மட்டும்தான் என்று யாம் சொல்லாதபோது, அதை
மறுக்கவோ எதையும் நிரூபிக்கவோ வேண்டிய
அவசியம் நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு இல்லை. 

நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பது அநீதியான ஒரு
கருத்து. இது அறியாமையின் பாற்பட்டது என்பதை
மீண்டும் மீண்டும் தனது பதிவுகளில் நியூட்டன்
அறிவியல் மன்றம் நிரூபித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக