புதன், 5 அக்டோபர், 2016

பதவி ஏற்றதும் லெனின் தனிச் சொத்துடைமையை
ஒழித்து உத்தரவு பிறப்பித்தார் என்பது உலகமே
வியந்த ஒரு ஒளி வீசும் உண்மை.மார்க்சிய நூல்களில்
மட்டுமின்றி, முதலாளித்துவ ஆசிரியர்களின்
நூல்களிலும் கூறப்பட்டுள்ள உண்மை. அதே போலத்தான் காஸ்ட்ரோவின் நடவடிக்கையும்.
**
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்று
ஒரு புத்தகம் NCBH வெளியீடாக வந்தது. அதைப்
படிக்கலாம். பிடல் காஸ்ட்ரோ பற்றிய, அநேகமாக,
எல்லா நூல்களிலும் படிக்கலாம். கியூபப் புரட்சி
பற்றி வெளிவந்த ஆங்கிலத் திரைப் படங்களில்,
ஸ்பானியத் திரைப் படங்களில் இந்த நிகழ்வுகள்
காட்டப் படுகின்றன.
**
நக்சல்பாரி இயக்கம் சார்ந்த செய்திகள், இயக்கத்
தோழர்கள் அனைவரும் அறிந்த உண்மைகளே.
குறிப்பாக, சத்திய மூர்த்தியின் விலகல் பூர்ஷ்வா
ஏடுகளில் எல்லாவற்றிலும் HINDU, EXPRESS etc
வெளிவந்தது. 1991 காலத்திய ஆங்கில நாளிதழ்களைப்
பார்க்கவும்.
**
இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள எல்லாச்
செய்திகளும் அம்பேத்கார்-ரங்கநாயகம்மா
நூல்களில் தக்க மேற்கோள்களால் சுட்டிக்
கட்டப் பட்டுள்ளன. ஏனைய அனைத்தும்
இக்கட்டுரை ஆசிரியரின் நேரடி அனுபவத்தில்
இருந்தும், நினவுப் பதிவில் இருந்தும் அப்படியே
தரப் படுபவை. அவை எந்த நூலின்
மேற்கோள்களும் அல்ல.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக