புதன், 11 மார்ச், 2015

ஒரு உறையில் ஒரு கத்தி!
----------------------------------------------
1) ஆம் ஆத்மி என்ற உறையில் கேஜ்ரிவால் என்ற ஒரு
  கத்தி தான்  இருக்க முடியும்.
2) யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷன் ஆகிய 
மற்ற இரண்டு கத்திகளை உடனே வெளியேற்ற வேண்டும்.
3) வெளியேறிய இருவரும் சொந்தமாகக் கட்சி ஆரம்பித்து 
மக்களின் ஆதரவைப் பெறட்டும்.
4) காலப்போக்கில் மக்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கிறார்களோ,
அந்தக் கட்சி மட்டுமே நிலைக்கும்.
---------------------------------------------------------------------------------------------
5) தமிழக அரசியலில் இதற்கு முன்னுதாரணம் உண்டு.
6) நெருக்கடி நிலைக்குப் பின்னர், திமுகவில் இருந்து,
நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம் உள்ளிட்ட பலர் 
விலகி, மதிமுக (மக்கள் திமுக) என்று ஒரு புதிய கட்சி 
ஆரம்பித்தனர். மக்கள் ஆதரவு இல்லாத அக்கட்சி,
சரித்திரத்தின் தாழ்வாரங்களில் சருகாக ஒதுங்கியது.
பின்னர் நாவலர் உள்ளிட்ட கபோதிகள் எம்.ஜி.ஆரின் 
காலடியில் வீழ்ந்து கிடந்து, எஞ்சிய வாழ்நாளைக் 
கழித்தனர்.
7) இதை யாரேனும் கேஜ்ரிவாலுக்கு எடுத்துச் சொல்லலாம்.
*************************************************************     
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக