திங்கள், 23 மார்ச், 2015

பெத்தப் பெரியவரும் புதுப் பெரியவரும்!
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------------
பகத்சிங்கும் வெடிகுண்டு அரசியல்வாதிகளும் என்ற தலைப்பில் 
ஒரு கட்டுரை எழுதினார் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் . எழுபதுகளின் 
இறுதியில் எழுதப்பட்ட கட்டுரை இது; தீக்கதிரில் வெளிவந்தது.
பகத்சிங் புரட்சியாளர் அல்லர் என்றும் வெடிகுண்டை வைத்துக் 
கொண்டு வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்துபவர் மட்டுமே என்றும் 
ஈ.எம்.எஸ் அக்கட்டுரையில் எழுதி இருந்தார்.
***
இதற்கு மறுப்பாக, தோழர் ஏ.எம்.கே அவர்கள் சமரன் 
இதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை மறுத்து 
அன்றைய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் 
ஏ பாலசுப்பிரமணியம் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
***
ஏ.பி அவர்களின் கட்டுரைக்கு மறுப்பாக  தோழர் ஏ.எம்.கே 
அவர்கள் ஒரு கட்டுரை எழுதி மார்க்சிஸ்ட்களின் வாயை 
அடைத்தார். பிரசித்தி பெற்ற அந்தக் கட்டுரை இப்படித் 
தொடங்கும் (அல்லது அக்கட்டுரையின் ஒரு வாக்கியம் 
இப்படி வரும்)  
***
"பெத்தப் பெரியவர் சொன்ன கருத்துக்கு நாம் மறுப்புக் 
கூறினோம். அதற்கு புதுப் பெரியவர் பதிலளிக்கிறார்"
என்பதுதான் அந்த வாக்கியம். இங்கு பெத்தப் பெரியவர் 
என்பது ஈ.எம்.எஸ்-ஐயும் புதுப் பெரியவர் என்பது 
ஏ.பி-ஐயும் குறிக்கும்.இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி 
என்பது பார்ப்பனப் புரோகிதர்களின் கூடாரமாகக் 
கிடந்ததை தோழர் ஏ.எம்.கே அவர்கள் அம்பலப் 
படுத்தி இருப்பார்.
***
ஜனசங்கத்தை விடவும் அதிக அளவு பார்ப்பனர்கள் 
இடம் பெற்ற கட்சியாக CPM கட்சி இருந்தது என்பது 
அழிக்க முடியாத வரலாற்று உண்மை.
இவ்வளவு பார்ப்பனர்களை வைத்துக் கொண்டு,
எப்படி இந்தியாவில் புரட்சி நடத்தி இருக்க முடியும்?
**************************************************888888888888      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக