ஞாயிறு, 22 மார்ச், 2015

லெனின் ஒரு காட்டு மிராண்டி!
பாஜக கல்யாணராமனின் ஆணவப் பேச்சு!
வின் டி.வி. விவாதத்தில்! (ஞாயிறு 22.03.2015)!
----------------------------------------------------------------------------
அருண் ஜெட்லி சமர்ப்பித்த கருப்புப்பண ஒழிப்பு 
மசோதாவால், கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா 
என்ற பொருளில் வின் டி.வி.யில் ஒரு விவாதம்!
இது இன்று ஞாயிறு 22.03.2015 இரவு ஏழு மணிக்கு 
ஒளிபரப்பப்பட உள்ளது. (Pre Recorded).
--
1) ஜெட்லியின் மசோதா, அடுத்த ஆண்டுதான் (01.04.2016) 
( கவனிக்கவும், 2016) செயல்பாட்டுக்கு வரும். அதுவரை 
கருப்புப்பண முதலைகள் VOLUNTARY DISCLOSURE 
செய்யலாம் என்கிறார் ஜெட்லி. இது மயிலே மயிலே இறகு 
போடு என்பதைப் போல உள்ளது. மயில் இறகு போடாது.
2) மசோதா எதற்கு? அவசரச் சட்டம் (ORDINANCE) அல்லவா 
கொண்டு வந்திருக்க வேண்டும்!
3)கருப்புப்பண  முதலைகளின் நன்கொடையில் உயிர் 
வாழும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முதலாளிகளுக்குச் 
செஞ் சோற்றுக்கடன் கழிக்க வேண்டும். எனவே 
இக்கட்சிகள் கறுப்புப் பணத்தை ஒழிக்காது.
இவ்வாறு வாதங்களை முன்வைத்தார் நியூட்டன் 
அறிவியல் மன்றத்தின் அரசியல் விமர்சகர் இளங்கோ.
--
விவாதத்தின் இறுதியில், அறிவு வறுமையாலும் 
கருத்து வறுமையாலும் அவதிப்பட்டு வரும் திரு 
கல்யாணராமன், தம்மிடம் மிகக் கொஞ்சமாகவே
இருந்த நிதானத்தை முற்றிலும் இழந்தார்.
லெனின் ஒரு காட்டு மிராண்டி என்றார். இதைக் 
கடுமையாக ஆட்சேபித்தும், திரு கல்யாண ராமனை 
நிதானத்துக்குக் கொண்டு வந்தும், அவரின் அய்யங்களுக்குத் 
தக்க விளக்கம் அளித்தும், விவாதம் சீர்குலைக்கப் 
படாமல் பாதுகாத்தது நியூட்டன் அறிவியல் மன்றம்.
----
திரு கல்யாணராமன் மீது எவர் ஒருவரும் கோபம் கொள்ளத் 
தேவையில்லை. அவர் அறிவு வறுமைக் கோட்டுக்கு 
(INTELECTUAL POVERTY LINE) மிகவும் கீழே இருப்பவர்.
மார்க்சியம் குறித்தும் லெனின் குறித்தும் நிறையச் செய்திகளை 
நாம் அவருக்கு, ( கல்யாண ராமன்  c/o கமலாலயம்)
அனுப்பி வைப்பதன் மூலம் அவரின் அறிவு வறுமையைப் 
போக்கலாம்.
--
மார்க்சியத்தில் ஆயிரம் குறைகள் உண்டு. எனினும் 
infinity அளவு நிறைகளும் உண்டு. அவதூறுகளால் 
மார்க்சியம் சேதம் அடைவதில்லை.
--------
மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை 
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை.
--உவமைக் கவிஞர் சுரதா--
------------------------------------------------------------------------------------------
****************************************************8888888              
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக