வியாழன், 12 மார்ச், 2015

சிரிப்பாய்ச் சிரிக்கும் பதவிச் சண்டை!
கெடுப்பதற்கு அடுத்தவன் வர வேண்டாம்!
ஒரு குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்மார்கள்!
தீர்ப்புச் சொல்ல மறுக்கும் சாலமன் அரசர்!
------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------------------------------------------
இடதுசாரித் தொழிற்சங்கம், இடதுசாரிக் கட்சி
இவற்றில் ஒரு குறிப்பிட்ட பண்பு உண்டு. அதுதான்
முறையான கால இடைவெளியில் மாநாடுகளை
நடத்துவது. கிளை மாநாடு, மாவட்ட மாநாடு,
மாநில மாநாடு ஆகியவை முறைப்படி நடந்து விடும்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப் பட்டு விடுவார்கள்.
மற்றக் கட்சிகளில் இல்லாத ஒரு சிறப்பு இது.
----------------------------------------------------------------------------------
ஆனால், பரிதாபத்துக்கு உரிய நிலைக்கு இழிந்துபோன,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), ஒரு மாவட்ட மாநாட்டை
ஒழுங்காக நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
கடலூர் மாவட்ட மாநாட்டு விவகாரம் சந்திக்கு வந்து
சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
-----------------------------------------------------------------------------------------
நான்தான் தேர்ந்து எடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்
என்கிறார் திரு சேகர் என்பவர். இல்லை, இல்லை,
என்னைத்தான் தேர்ந்து எடுத்தார்கள் என்கிறார் திரு.
மணிவாசகம் என்பவர். யார் உண்மையான மாவட்டச்  
செயலாளர் என்பதை  முடிவு செய்ய சிவில் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள்.
----------------------------------------------------------------------------------------
மாவட்டத் தேர்தலில் DISPUTE இருக்கிறது என்றால்,
மாநிலச் செயலாளர் தீர்த்து வைக்க வேண்டும்.அதாவது,
புதிய மாநிலச் செயலர் முத்தரசன் இதில் தீர்ப்புச் சொல்ல
வேண்டும். இந்தத் தீர்ப்பை ஏற்காதவர்கள், அகில இந்தியப்
பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியிடம் முறையிட
வேண்டும். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டம்.
---------------------------------------------------------------------------------------------------
ஆனால், கம்யூனிஸ்ட் நடைமுறையை மீறி, விவகாரம்
சிவில் நீதி மன்றத்துக்குப் போய் உள்ளது. இதன் மூலம்,
கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதி இருந்த கட்சியின் மரியாதையும்
காற்றில் பறந்து விட்டது. இந்தச் செய்திகளை ஏடுகளில்
படிக்கிற மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சி மீது ஏதேனும்
மரியாதை வருமா? இதை நாம் சுட்டிக் காட்டிக் கண்டித்தால்,
போலிகளும் பிழைப்புவாதிகளும் நம் மீது பாய்கிறார்கள்.
இதன் மூலம் மேலும் மேலும் மரியாதை இழக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------
கண்டதைச் சொல்கிறேன்- உங்கள்
கதையைச் சொல்கிறேன்-இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால்- அவமானம்
எனக்குண்டோ?
-----ஜெயகாந்தன்-------
*******************************************************8888             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக