ஞாயிறு, 29 மார்ச், 2015

'மார்க்சிய' நண்பர்கள் கவனத்திற்கு,
---------------------------------------------------------------
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்
துறையிலும் கடுமையாக உழைத்து வருகிறேன்.
பலவீனப் படுத்தப்பட்ட பார்ப்பனீயம் ஓரிரு ஆண்டுகளாக
மீண்டும் மேலோங்குவதை இலக்கியத் தளத்தில்
காண்கிறேன். (இந்தக் கணிப்பு தவறானது என்றால்,
சரியான கணிப்பு எது என்பதை தெரியப் படுத்தவும்)
**
சமூக வலைத்தளங்கள், காட்சி ஊடகங்கள், அச்சு
ஊடகங்கள், பொது அரங்குகள் என்று சாத்தியமான
அனைத்து வழிகளிலும் பார்ப்பனீயம் மீண்டும்
தலைதூக்குவதை, அதன் மூர்க்கத்தை நாளும் காண்கிறேன்.
கிணற்றுத் தவளைகளாய் இருந்து கொண்டு, சுற்றி உள்ள
சமூகத்தைக் கூர்ந்து  நோக்காமல் இருப்போரால்
பார்ப்பனீயத்  திட்டங்களை, அவற்றின் பேராபத்தை
உணர்ந்து கொள்ள இயலாது.
**
இலக்கியத் துறையில் எவ்விதப் பரிச்சயமும் அற்றவர்கள்
பார்ப்பனீய ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுவது இயற்கையே.
எனவே, பார்ப்பனீயத்தை இலக்கியக்  களத்தில் சந்திக்க
நேரும்போது, பார்ப்பனீய எதிர்ப்புப் பாரம்பரியமும்,
பார்ப்பனீய எதிர்ப்பை அடிப்படையாகவும் கொண்டுள்ள
அனைத்து சக்திகளுடன் ஓர் ஐக்கிய முன்னணி கட்டுவது
இன்றைய காலக் கட்டத்தின் இயல்பான தேவை ஆகிறது.
**
ஆன்மிகவாதிகளான ராமானுஜர் போன்றோர் மனுதர்ம
எதிர்ப்பில் முன்னணியில் இருந்தவர்கள் என்பது வரலாறு
(அவர்களின் மனுதர்ம எதிர்ப்பு முழுமையற்றது என்ற
போதிலும்). எனவே ராமானுஜரை மக்களுக்கு அறிமுகப்
படுத்தும் பணிகளை, குறிப்பாக, அவரின் மனுதர்ம எதிர்ப்புப்
பணிகளைப் பரப்புரை செய்வதற்கு முன்வந்துள்ள
கலைஞரின் பணிகளை வரவேற்பது, பார்ப்பன
எதிர்ப்பாளர்களின் கடமை. இது தெளிவு; மயக்கம் அல்ல.
**
இதைச் செய்யும்போது, தங்களைப் போன்றவர்கள்
மார்க்சியத்தின் பெயரால், பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக
கத்தியை வீசுகிறீர்கள். பேரப்  பிள்ளைகளுக்குப் பூணூல்
போட்ட சோம்நாத் சட்டர்ஜியைக் கண்டித்தால், தாங்கள்
சட்டர்ஜிக்கு ஆதரவாக வருகிறீர்கள். இது பார்ப்பன
அடிவருடித் தனம் அல்லாமல் வேறு என்ன?
**
கலைஞரா சட்டர்ஜியா என்றால், நான் கலைஞரைத்
தான் ஆதரிக்க முடியும். இது மயக்கம் அல்ல, தெளிவு.
----------------------------------------------------------------------------------------            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக