புதன், 25 மார்ச், 2015

சிறுவனைச் சிறையில் அடைத்துக் கொக்கரித்த 
உ.பி. அமைச்சர் அசம்கானின் கொடிய கரங்களை 
வெட்டி வீழ்த்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!
----------------------------------------------------------------------------
IT சட்டத்தின் 66A பிரிவை முற்றிலுமாக ரத்து 
செய்து  தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதி மன்றம்.
மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த ஒரு 
நிகழ்வு அண்மையில் உ.பி. மாநிலம் ராம்பூர் 
மாவட்டத்தில் நிகழ்ந்தது. பன்னிரண்டாம் வகுப்புப் 
படிக்கும் ஒரு பள்ளிச் சிறுவன், அமைச்சர் அசம்கான் 
கூறியதாக வந்த ஒரு தகவலை முகநூலில் பதிவு 
செய்தான். இதற்காக அந்தச் சிறுவன் மீது 66A பிரிவின் 
கீழ் வழக்குத் தொடர்ந்து, அச்சிறுவனைச் சிறையில் 
அடைத்தார் அசம்கான்.
**
சிறுவனின் பெற்றோர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பித்தனர்.
நான்கு நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் சிறுவன், ஜாமீன் 
கிடைத்து விடுதலை ஆனான். தலைக்கு ரூ 20,000/- வீதம் 
இரண்டு ஜாமீன்தாரர்கள் மொத்தம் ரூ 40,000/- பிணைத்தொகை 
செலுத்திய பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது.
**
சாதாரண நடுத்தர வர்க்கப்  பெற்றோருக்கு, ஜாமீனுக்கு 
ரூ 40,000/- மற்றும் வக்கீலுக்குக் கட்டணம் என்று 
எதிர்பாராமல் ஒரு லட்சம் ரூபாய் செலவு பிடித்தது 
தங்கள் பையனைச் சிறையில் இருந்து மீட்பதற்கு.
**
சர்வ வல்லமை வாய்ந்த ஒரு அமைச்சரை ஒரு பதினெட்டு 
வயதுச் சிறுவன் என்ன செய்து விட முடியும்? ஒரு சிறுவனிடம் 
போய், தன வீரத்தையும் அதிகார பலத்தையும் காட்டும் 
இந்தக் கோழை அசம்கான் ஒரு மனிதனா? கேவலம், ஒரு 
சிறுவனிடம் போய் சரிக்குச் சரி என்று மல்லுக்கு நிற்பதா?
சிறுவன் தவறே செய்திருந்தாலும், அதை இந்த அமைச்சர் 
மன்னிக்கக் கூடாதா? மனித நாகரிகமே இந்த அசம்கானுக்குக் 
கிடையாதா?
**
அந்தச் சிறுவன் ஒரு இந்துவாக இருக்கக் கூடும் என்று சிலர் 
நினைக்கலாம். அது உண்மையல்ல. அந்தச் சிறுவனும் 
இஸ்லாம் மதத்தவனே. இறையச்சம் மிகுந்த ஒரு இஸ்லாமிய 
நடுத்தர வர்க்கக் குடும்பம் அது. இசுலாமிய ஒற்றுமை,
இசுலாமிய சகோதரத்துவம் என்றெல்லாம் இந்த அசம்கான்கள் 
முழங்குவது, அப்பாவி இசுலாமிய மக்களை ஏமாற்றவே 
என்பதை இந்நிகழ்வு புலப் படுத்துகிறது.
**
யார் இந்த அசம் கான்? தன்னுடைய தொழுவத்தில் வளர்த்து 
வந்த எருமை மாடுகள் காணாமல் போனபோது, அவற்றைத் 
தேடச் சொல்லி, மாநில CID போலிசை ஏவி, அது அம்பலப் 
பட்டுப் போனதால், சந்தி சிரித்துப் போன நபர்தான் 
இந்த அசம்கான்.
**  
66A பிரிவின் கடைசிப் பலி இந்தச் சிறுவன்தான் என்பதால் 
இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு 
முன்னால் இப்பிரிவின் கொடிய நச்சுப் பற்களால் தீண்டப் 
பட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சமல்ல. 
**
66A பிரிவை ரத்து செய்ததன் மூலம், அசம்கான்  
போன்ற மனித குல எதிரிகளின் கொடிய நச்சுக் 
கரங்களை வெட்டி வீழ்த்தி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.
*******************************************************************        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக