சனி, 28 மார்ச், 2015

(5) வெகு விமரிசையாக பேரப் பிள்ளைகளுக்குப்
பூணூல் போட்ட மார்க்சிஸ்ட் புரட்சியாளர்
சோம்நாத் சட்டர்ஜியைப் போற்றுவோம்!
ராமானுஜ காவியம் எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
-----------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------------------------
ஓம்:  பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்.
------காயத்ரி மந்திரம்--------------
**
கடல் சூழ்ந்த இப்பரத கண்டமே சங்கமித்த சுபமங்கள
வைபவம் அன்றோ அஃது! பிரகாஷ் காரத் தம்பதியர்,
எச்சூரி குடும்பத்தார், துணைக் கண்டத்தின் இன்ன பிற
மார்க்சிஸ்ட் புரட்சியாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ்
பிரமுகர்கள் என்று பரத கண்டத்தின் பிராமண
சிரேஷ்டர்கள் அனைவரும் ஒன்று கலந்த புரட்சிகர
நிகழ்வன்றோ அஃது! வளர்ப்பு மகன் திருமணத்தை
ஆன்மிகத் தரத்தில் தோற்கடித்த அந்த விசேஷித்த
வைபவத்தில்தான் சோம்நாத் சட்டர்ஜியின் பேரப்
பிள்ளைகளுக்குப் பூணூல் அணிவிக்கப் பட்டது.
**
பேரப்பிள்ளைகளுக்கு எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி,
பூணூல் அணிவித்து, மனுதர்மத்தை நிலைநாட்டிய
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ தலைவர் சோம்நாத்
சட்டர்ஜியைப் போற்றுவோம்! ஸ்ரீரங்கம் பிராமணர்களின்
கொட்டத்தை அடக்கிய ராமானுஜரின் வரலாற்றை
எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
சமூகநீதிக் காவலர்கள் என்று போற்றப்படும் முலாயம்
சிங் யாதவ்வோ அல்லது லல்லு பிரசாத் யாதவ்வோ,
யாதவ சாதியை விடுத்து வேறு சாதியில் பெண்
எடுப்பார்களா? மாட்டார்கள். அவர்கள் தீவிரமான
சாதி அபிமானிகள். அவர்களைப் போற்றுவோம்!
சாதி ஒழிப்பில் ஊன்றி நிற்கும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
ராஜாஜி, காமராசர் முதல், ராமதாஸ்-வைகோ-விஜயகாந்த்
வரை அனைவரும் சுயசாதி அரசியல் செய்தவர்கள்;
செய்து வருபவர்கள். ஆனால் சுயசாதி அரசியல் செய்வதைக்
கனவிலும் நினைக்காத கலைஞரைத் தூற்றுவோம்.
**
ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!!
பூணூல் புரட்சி ஜிந்தாபாத்!!
மார்க்சிய லெனினிய பூணூலியம் ஜிந்தாபாத்!
--------------------------------------------------------------------------------
தொடரும்
************************************                
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக