புதன், 4 மார்ச், 2015

தத்துவங்களைத் தகர்த்து எறிந்து   
மணி மகுடங்களை மண்ணில்  உருட்டி 
உலகைப் புரட்டிப் போட்ட 
அமெரிக்க அதிபர் நிக்சனின் சீன விஜயம்!
------------------------------------------------------------------------------------
......................பகுதி ஒன்று................................ 
ஒபாமாவின் காலை நக்கும் மோடி! 
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் சீனாவின் அதிபர் மாவோ,
ஏகாதிபத்திய அமெரிக்காவின் அதிபர் நிக்சன் 
ஆகிய இருவரும் பெய்ஜிங்கில் 1972இல் சந்தித்தனர். 
நிக்சனின் சீன வருகையின் போது இது நிகழ்ந்தது. 
தலைப்பில் கூறிய அத்தனை அடைமொழிகளுக்கும் சாலப் 
பொருந்துவதாக அமைந்தது நிக்சனின் சீன விஜயம்.
---------------------------------------------------------------------------------- 
அமெரிக்க அதிபர்கள் உலகின் முக்கிய நாடுகளுக்கு 
விஜயம் செய்வது ஒரு அபூர்வ விஷயம் அல்ல.
அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாண்டு 2015 ஜனவரி 26
அன்று இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி அவரை 
வரவேற்றார். இதற்கு முன்பும் டாக்டர் மன்மோகன் சிங் 
காலத்தில் 2010 நவம்பரில் ஒபாமா இந்தியா வந்தார்.
----------------------------------------------------------------------------------- 
இவ்வாண்டு இந்தியக் குடியரசு நாள் விழாவின்போது, 
ஒபாமா வந்தபோது, ஒபாமாவின் பூட்ஸ் காலை, இந்தியப் 
பிரதமர் மோடி நக்குவது போல கணக்கற்ற சித்தரிப்புகள் 
சமூக ஊடகங்களில் காணக் கிடைத்தன. இத்தகைய 
outrageous வர்ணனைகள் முற்போக்காளர்கள் என்று 
தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் 
குட்டி முதலாளித்துவ விடலைகள் அளித்த கொடை ஆகும்.
ஜார்ஜ் W புஷ் வருகையின் போதும் (2006), ஒபாமாவின் 
முந்திய வருகையின்போதும் (2010 நவம்பர்) டாக்டர் 
மன்மோகன் சிங்கும் இத்தகைய வர்ணனைகளுக்குத் 
தப்பவில்லை. 
--------------------------------------------------------------------------------------     
அமெரிக்க அடிவருடி, ஏகாதிபத்திய எடுபிடி போன்ற வசவுகளும் 
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி, இந்தியாவை   
அடகு வைத்து விட்டனர் இந்தியப் பிரதமர்கள் என்ற 
கண்டனங்களும் மன்மோகன்சிங், மோடி இருவருக்கும் 
குட்டி முதலாளித்துவ விடலைகளால் பெருமாள் கோவில் 
சுண்டல் போல வழங்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------------------------- 
உலக மக்களின் கொடிய எதிரி அமெரிக்கா, கொலைகார நாடு 
அமெரிக்கா எனும்போது, அந்தக் கொடிய அமெரிக்க அதிபரைத் 
தங்கள் நாடுகளுக்கு அழைக்கும் ஏழை நாடுகளின் 
தலைவர்கள் அனைவருக்கும் மேற்கூறிய கண்டனங்களும் 
வசவுகளும் பொருந்தும் அல்லவா! அப்படியானால், இவை 
சீனாவுக்கும் அதன் தலைவர் மாவோவுக்கும் பொருந்தும் 
அல்லவா!
-------------------------------------------------------------------------------------------------- 
ஆனாலும், மாவோ ஒரு அமெரிக்க எடுபிடி என்றோ,
ஏகாதிபத்திய அடிவருடி என்றோ சீனாவில் யாரும் 
கூறவில்லை. கூறவும்--ஏன் நினைக்கவும்கூட--முடியாது.
நிக்சனின் பூட்ஸ் காலை மாவோ நக்குவதுபோல ஒரு 
படத்தை அங்கு கக்கூஸ் சுவரில்கூட எவனும் கிறுக்கி 
விட முடியாது. கண்டு பிடித்து விடுவார்கள். பிடிபட்டால்,
பிடிபட்டவன் மட்டுமல்ல, அவனுடைய தலைமுறையே 
பூண்டற்றுப் போகும். 
------------------------------------------------------------------------------------------- 
முட்டாள்தனமான, தற்குறித்தனமான, சமூகத்துக்கும் 
அரசுக்கும் எதிரான கருத்துக்களை 
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சீனா அனுமதிப்பதில்லை.
மார்க்சியமும் அனுமதிப்பதில்லை.அன்றும் இதுதான் நிலை;
இன்றும் இதுதான் நிலை.
--------------------------------------------------------------------------------------------------
நிக்சனை மாவோ வருந்தி வருந்தி அழைத்தார். இந்த நிக்சன் தான்
வாட்டர்கேட் ஊழலில் பின்னாளில் பதவி இழந்தவர். நிக்சன் 
சீனாவில் எட்டு நாட்கள் விஜயம் செய்தார். இந்த எட்டு நாள் 
விஜயம்தான் சீனாவில் அன்று நிலவிய சோஷலிச சமூக 
அமைப்பின் தகர்வுக்கும் கம்யூன்களின் அழிவுக்கும்
தொடக்கமாக அமைந்தது. சுருங்கக் கூறின், தமது 
விஜயத்தின்போது, கம்யூனிசத்துக்குக் கொள்ளி வைத்தார் 
நிக்சன் என்பதுதான் நெஞ்சைப் பிழியும் சோகமான வரலாறு.
---------------------------------------------------------------------------------------------------
தொடர்ச்சி அடுத்த கட்டுரையில்.
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------------
**********************************************************************8         
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக