வெள்ளி, 27 மார்ச், 2015

(4) ஆர்.எஸ்.எஸ்.சின்  அரசவைப் புலவர் ஜெயமோகன் 
தம் காழ்ப்பையும் மீறி ஏற்றுக் கொண்ட 
கலைஞரின் படைப்பிலக்கியத் திறன்
வெளிப்படட்டும் ராமானுஜ காவியத்தில்!
--------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------------------------------
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல் 
என்கிறார் வள்ளுவர். எதுவும் தெரியாமலேயே 
ராமானுஜர் குறித்து எதிர்மறையாகப் பேசும் அனைவரையும் 
இக்குறள் கண்டிக்கிறது.
**
திரைத் தொடரின் தயாரிப்பாளர் குட்டி பத்மினியிடம் 
ராமானுஜர் பற்றிய நிறைய நூல்களைக் கொடுத்துப் 
படிக்கச் சொன்னார் கலைஞர் என்ற செய்தி அறிந்தேன்.
அவர் கொடுத்த நூல்கள் பற்றி யான் அறியேன். ஆயினும் 
இந்திரா பார்த்தசாரதி எழுதிய "ராமானுஜர்" என்ற 
நாடக நூலை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
ஆகச் சிறந்த நூல் இது என்ற பொருளில் அன்று.
மிக எளிமையானது என்பதால்.
**
ரோமாபுரிப் பாண்டியனை இயற்றிய கலைஞர் 
பாயும்புலி பண்டார வன்னியனைப் படைத்தார்.
பொன்னர் சங்கரை உருவாக்கினார். மண்மூடிய
வரலாற்றை அகழ்ந்தெடுத்து, மக்களுக்குக் 
காட்டினார். எனினும் இவை யாவும் கற்றோர்க்கே 
விளங்கும். எனவே பாமரர்க்கும் புரியும் வண்ணம் 
இன்று ராமானுஜ காவியத்தைப் படைக்கிறார்.
**
அண்ணா கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்க
எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையுமே 
பிரச்சார இலக்கியம் என்று இகழும் வலதுசாரி 
எழுத்தாளர் ஜெயமோகனால் கூட, கலைஞரின் 
படைப்புகளின் தாக்கத்தை மறைக்க முடியவில்லை.
எனவே, தாம் எழுதிய நூலில், சிறந்த நாவல்களின் 
பட்டியலில், கலைஞர் எழுதிய பின்வரும் மூன்று 
நாவல்களைக் குறிப்பிட்டுள்ளார்:
1. ரோமாபுரிப் பாண்டியன் 2.பொன்னர் சங்கர் 
3. தென்பாண்டிச் சிங்கம்.
(பார்க்க: நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன்,
கிழக்கு பதிப்பகம், செப்டம்பர் 2011, முதல் பதிப்பு,
பக்கம்:338, தலைப்பு: தமிழ் நாவல்கள், விமர்சகனின் 
சிபாரிசு, (ஆ) குறிப்பிடத் தக்க பொழுதுபோக்குப் 
படைப்புகள்)
-----------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*********************************************************************     
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக