வெள்ளி, 6 மார்ச், 2015

நிர்பயா வழக்கு பற்றிய ஆவணப் படமும் 
நுரைத்துப் பொங்கும் எதிர்வினைகளும்!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------
1) கற்பழித்துக் கொல்லப்பட்ட நிர்பயாவின் வழக்கு பற்றிய 
"இந்தியாவின் மகள்" என்ற ஆவணப் படத்தை, பிரிட்டிஷ் 
பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின் (Leslee Udwin) என்பவர் 
மார்ச் 2015இல் வெளியிட்டுள்ளார்.    
2) இந்திய அரசு உடனடியாக இப்படத்தைத் தடை செய்துள்ளது.
எனினும், வெளிநாடுகளில் இது திரையிடப் பட்டு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------
3)"கற்பழிக்கப் படும்போது, பெண் எதிர்த்துப் போராடக் கூடாது,
அப்படிப் போராடினால் கொன்று விடுவோம்" என்றும்,
"எங்களைத் தூக்கில் போட்டால், இனி பெண்களுக்குப் 
பாதுகாப்பே கிடையாது" என்றும் குற்றவாளி முகேஷ் 
ஆணவத்துடன் மொத்த சமூகத்துக்குமே எச்சரிக்கை 
விடுகிறான். குற்றவாளி முகேஷ் பற்றிய இதுபோன்ற  
காட்சிகளே படத்தின் குவிமையமாக அமைந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------- 
4)இந்திய சமூகம் குறித்த துளிப்புரிதலும் இல்லாமல், 
ஐரோப்பியப் பார்வையுடன் எடுக்கப்பட்ட படம் இது.
இந்திய சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் எச்சரிக்கை 
விடுக்கும் முகேஷின் ஆணவக் கருத்துக்களை மிகுந்த 
வீரியத்துடன் காட்சிப் படுத்திய இயக்குனர், அவனுடைய 
ஆணவம் தவறு என்று ஒரு செய்தியைச் சொல்லி 
இருப்பாரேயானால், இப்படம் ஏற்படுத்தும் எதிர்மறைத் 
தாக்கம் மட்டுப் படுத்தப் பட்டிருக்கும். 
---------------------------------------------------------------------------------------------- 
5) ஆனால், இப்படம் எத்தகைய செய்தியையும் (MESSAGE)
சொல்லவில்லை.( செய்தி  என்றால் புரியாதவர்கள் 
படிப்பினை என்று எடுத்துக் கொள்ளலாம்). ஏனெனில்,
ஒரு கலைப் படைப்பில் எவ்விதமான செய்தியையும் 
சொல்லக்கூடாது என்கிறது பின்நவீனத்துவம்.
------------------------------------------------------------------------------------------- 
6) ஐரோப்பிய இயக்குனர்கள் மிகப் பெரிதும் பின்நவீனத்துவ 
செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள். லெஸ்லி உட்வினும் ஒரு 
பின்நவீனத்துவ இயக்குனரே. ஒரு கலைப்படைப்பில் ஏதேனும் 
ஒரு செய்தியைச் சொல்லி விட்டால், அது பிரச்சார 
இலக்கியமாக இழிந்து விடும் என்பதே ஐரோப்பிய 
இயக்குனர்கள் கடைப்பிடிக்கும் பொன்விதி( GOLDEN RULE )
------------------------------------------------------------------------------------------------------ 
7) ஒரு கலைப் படைப்பை அனுமதிப்பதா, தடை செய்வதா 
என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்ன? 
அ) அப்படைப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஆ) அத்தாக்கம் சமூகத்தை மேம்படுத்துமா, கீழ் இறக்குமா? 
இந்த இரண்டு காரணிகள் மட்டுமே அளவுகோல் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------
8) இதன்படி பார்த்தால், இந்தப் படம், மிகுந்த கலைத்தன்மையுடன் 
எடுக்கப் பட்டுள்ளதாக வைத்துக் கொண்டாலும், சாராம்சத்தில்,
இது ஒட்டுமொத்த இந்தியப் பெண்களை அச்சுறுத்துகிறது;
அதோடு, குற்றவாளிகளுக்கு தைரியம் ஊட்டுகிறது. எனவே,
இப்படம் பிற்போக்கானது. நிராகரிக்கப் படவேண்டியது.
----------------------------------------------------------------------------------------------------- 
9) கருத்துரிமை என்ற பெயரில் குட்டிமுதலாளித்துவ அற்பர்களும்,
தாராளவாதிகளும் இப்படத்தை ஆதரித்துத் தாங்கள் 
மக்களின் எதிரிகள் என்பதை அம்பலப் படுத்திக் கொண்டுள்ளனர்.
எதிரி வர்க்கக் கருத்துகளை, மக்கள் நலன் கருதி, மார்க்சியம் 
அனுமதிப்பதில்லை என்பதை குட்டி முதலாளித்துவப் 
பிற்போக்குப் பிண்டங்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்வோம்.   
----------------------------------------------------------------------------------------------------------    
10) நாகாலாந்து மாநிலத்தில் திமாப்பூர் மத்திய சிறையில் 
ஒரு கற்பழிப்புக் குற்றவாளி அடைக்கப் பட்டிருந்தான். சிறையை 
உடைத்து, அக்குற்றவாளியை வெளியே இழுத்து வந்து, அடித்துக் 
கொலை செய்தார்கள் நாகாலாந்து பழங்குடி இன மக்கள்.
11) ஆந்திராவில், நக்சல்பாரிகள் செல்வாக்குப் பெற்றிருந்த 
காலத்தில், மக்கள் நீதிமன்றங்களை அமைத்து, கற்பழிப்புக் 
குற்றவாளிகளுக்கு, மக்கள் விரும்பிய தண்டனையைக் 
கொடுத்தார்கள் புரட்சியாளர்கள். (INSTANT JUSTICE). 
------------------------------------------------------------------------------------------------
15) இதுதான் பாட்டாளி வர்க்கத்தின் நீதி பரிபாலனம்!
பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!
குட்டி முதலாளித்துவ அற்பர்களை  அடித்து உதைப்போம்!!
--------------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
****************************************************************   
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக